
அமெரிக்காவின் பிரபல பாப்பாடகி லேடி ககா. கவர்ச்சி பாடகியான இவர் சமீபத்தில் தான் பாட்டு பாடி நடித்த “மேரி தி நைட்” என்ற வீடியோவை ரிலீஸ் செய்தார். அப்போது அவரது வித்தியாசமான “போஸ்” அடங்கிய போட்டோக்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் ஆஸ்பத்திரி தள்ளு வண்டியில் (“ஸ்ட்ரெச்சர்”) படுத்து இருப்பது போன்று இருந்தது. அது அவர் “செக்ஸ்” மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்ற வதந்தியை பரப்பியுள்ளது.ஏனெனில் சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதில், “உங்களுக்கு எப்போதும் சொல்லாத தகவலை வெளியிடப்போகிறேன். அது அருவெறுக்க தக்க உண்மையாக இருக்கலாம்” என தெரிவித்து இருந்தார். அதை வைத்து இவர் செக்ஸ் மாற்று ஆபரேசன் செய்து இருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் இவர் வித்தியாசமான முறையில் உடைகளை அணிந்து தோன்றி வருவதான் இந்த வதந்தியை உண்மை என நம்பகத்தோன்றுவதாக இவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment