Tuesday, December 6, 2011

Facebook, Twitter மூலம் நீங்களும் வேலை தேடலாம் !


மக்களுக்கு வேலைவாய்ப்புக்களைத் தேடித்தரும் அரிய உதவியைச் செய்வதில் சமூக வலையமைப்புகள் ஈடுபடுகின்றன. Facebook, LinkedIn அல்லது Twitter தொடர்புகளூடாக 22 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்களைத் தேடிப்பெற்றுள்ளதாக ஓர் ஆய்வு கூறப்படுகின்றது. இந்த ஆய்வின்படி 2010இல் சமூக வலையமைப்பினூடாக 14.4மில். மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்ரீதியான சமூக வலையமைப்பாக உள்ள LinkedIn என்ற தளத்தினைவிடவும் பாரிய சமூக வலைத்தளமாக இதுவரை காணப்படும் Facebook இன்னும் பயனுடைய உதவிகளை வேலை தேடுவோருக்குச் செய்கின்றது. 6 பேரில் ஒருவர் சமூக வலையமைப்பினூடாகத் தொழில் தேடியுள்ளனர். இவர்களில் 83 வீதத்தினர் தமது வெற்றிக்கு Facebook தான் காரணமெனக் கூறியுள்ளனர். 46 வீதத்தினர் LinkedIn இனையும் 36 வீதத்தினர் Twitter இனையும் குறிப்பிட்டனர். எனினும் 31 வீதத்தினர் தாங்கள் இம்மூன்றையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டனர். உடனடியாக வேலை தேடுபவர்களில் 54 வீதத்தினர் இம்மூன்று சமூக வலையமைப்புகளையும் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். இந்த ஆய்வில் மேலும் 150 தொடர்புகளுக்கும் மேலே இருக்கும் ஒருவர் ஒரு வேலையைத் தேடுவதில் மிகவும் வெற்றிகரமாக இருந்தார் என்றும் தெரிந்தது.

No comments:

Post a Comment