Tuesday, December 6, 2011

பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம்

லிதுவேனியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமான 13 வயது சிறுமியை , நேரில் வரவழைத்துக் கொலை செய்யதுள்ளது அம்பலமாகியுள்ளது. போலீசாரிடம் அந்தச்சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அந்தச் சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

இன்னு‌ம் ஒரு செய்தி: 

கபில் சிபல் : அலைக்கற்றை ஊழல் பற்றி, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் கபில்சிபல், "ஆரம்பத்தில் இருந்தே, ஊழல் பெரிதுபடுத்தப்பட்டு இருக்கிறது' என்று கூறி வருகிறார். கடைசியில், "ஊழலே நடக்கவில்லை' என, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார்.யாரையோ திருப்திபடுத்த, தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வழி செய்துவிட்டார். இதன் மூலம், இந்த ஊழலை கண்டு பிடித்தவர்களை எல்லாம் அடிமடையனாக்கிவிட்டார். உயரிய மனிதராக கருதப்பட்ட இவர், யாருடைய போதனையாலோ, அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்.இப்படிப்பட்ட அமைச்சர், அரசியல்வாதிகள் தான் இந்தியாவுக்கு தேவை என நிரூபித்து விட்டார். வாழ்க நாடு, வாழ்க ஊழல் ஒழிப்பு கோஷம்!

No comments:

Post a Comment