Tuesday, December 6, 2011

இந்திய குரங்கு பாகிஸ்தானில் கைது!


இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டி சென்ற குரங்கை, பாகிஸ்தானில் கைது செய்து கூண்டில் அடைத்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனல் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண எல்லைக்குள் குரங்கு ஒன்று நுழைந்து விட்டது. அதை உள்ளூர் மக்கள் பார்த்து, குரங்கை பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் குரங்கு சிக்காமல் அங்கும் இங்கும் தாவி சென்றது. உடனடியாக உள்ளூர் வனவிலங்கு துறை அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து பவால்பூர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பகுதியில் குரங்கை தேடினர். கடும் போராட்டத்துக்கு பிறகு குரங்கை ஒருவழியாக பிடித்தனர். பின்னர் அதை பவால்பூர் மாவட்ட வனவிலங்கு பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். அந்த குரங்குக்கு, “பாபி” என்று செல்லமாக பெயரும் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பன்றி ஒன்று இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதை போலீசார் பிடித்து வைத்துக் கொண்டனர். தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய பாகிஸ்தான் உறவில் சிக்கல் நீடிப்பதால், வனவிலங்குகள், பறவைகள் கூட எல்லை தாண்டி வந்தால், ÔகைதுÕ செய்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment