Tuesday, December 6, 2011

ஆடைகளை களைந்து 84 வயது மூதாட்டிக்கு நிர்வாண சோதனை!பரபரப்பு


அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த 84 வயது லினோர் ஜிம்மர்மேன் என்ற மூதாட்டி புளோரிடாவில் உள்ள போர்ட் லாடர்டேல் நகருக்கு செல்ல கடந்த செவ்வாய்க்கிழமை கென்னடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை உடல் முழுவதும் பரிசோதனை செய்யும் ஸ்கேனர் பரிசோதனைக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துள்ளனர். அதற்கு, Ôஇதய கோளாறு பிரச்னையால், பேஸ் மேக்கர் போன்ற கருவி பொருத்திக் கொண்டுள்ளேன். ஸ்கேனரில் இருந்து வெளியாகும் வெப்பகதிர் பேஸ் மேக்கர் கருவியை பாதிக்கும்Õ என்று லினோர் கூறியுள்ளார்.
-
உடனே அவரை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து முழு பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து லினோர் கூறுகையில், ÔÔஇந்த பிப்ரவரி மாதம் வந்தால் எனக்கு 85 வயதாகிறது. முதுகு எலும்பு வளைந்து கூன் விழுந்துள்ளது. வீல் சேரில்தான் சென்றேன்.

அப்போதும் விடாமல், தனி அறையில் என் பேன்ட், மற்ற ஆடைகளை களைந்து உடல் முழுவதும் பரிசோதனை செய்தனர். அந்த சோதனையின் போது நான் மடியில் வைத்திருந்த இரும்பு வாக்கிங் ஸ்டிக் காலில் விழுந்து ரத்தம் வந்துவிட்டது. கால் சாக்ஸ் ரத்தத்தில் நனைந்துவிட்டது. நான் என்ன தீவிரவாதி போலவா இருக்கிறேன்? பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கையால் மனமொடிந்து விட்டேன்ÕÕ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்ட ஏர்போர்ட் அதிகாரிகள், Ôஅப்படி எதுவுமே நடக்கவில்லைÕ என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நியூயார்க்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment