
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரூ.55 கோடி செலவாகி உள்ளதாம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் லண்டனில் நடக்க உள்ளது. இதற்காக இன்னும் பல கோடிகள் செலவு பிடிக்கும்.
மொத்தம் விஸ்வரூபம் படத்துக்கு ரூ.120 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கமல் படங்களில் தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்றவை அதிக செலவில் எடுக்கப்பட்டன. அவற்றை விட பல மடங்கு அதிக செலவில் விஸ்வரூபம் தயாராகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. இதில் கமல் ஆப்கானிஸ்தான் தீவிரவாதியாக நடிக்கிறார். அத்துடன் டெல்லியில் ஒருமாதம் முகாமிட்டு கதக் நடனமும் கற்றுள்ளார். கதக் நடன பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டு உள்ளது.
|
No comments:
Post a Comment