Tuesday, December 13, 2011

மிரள வைத்த 'மிஸ்டுகால்'!


துக்க வீடு ஒன்றில் இருந்ததால், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சரியாகக் கவனிக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மொபைலை எடுத்துப் பார்த்தபோது... 

ஒரே நம்பரிலிருந்து நான்கு 'மிஸ்டுகால்'கள். புது நம்பராக இருந்ததால்... அவசரமாக யாரும் அழைத்திருப்பார்களோ என்று பதற்றத்துடன் அந்த நம்பரை டயல் செய்தேன். எதிர்முனையில் பேசியவர் ஏதோ பெயரைச் சொல்லி கேட்க, 'ராங் நம்பர்' என்று தெரிந்தது.

என்றாலும், அவர், கட் செய்யாமல், என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்க, நானும் பதற்றத்தில் பெயர், ஊர் என அனைத்தையும் ஒப்பித்துவிட்டேன். 

அதற்குப் பிறகுதான் அவஸ்தையே! தினமும் அந்த நம்பரிலிருந்து நேரம் கெட்ட நேரங்களில் போனில் பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டான் அந்த நபர். விஷயத்தை என் கணவரிடம் சொல்ல, அந்த நம்பருக்கு போன் செய்து அவர் கண்டித்த பின்புதான் விட்டது தொல்லை.

'மிஸ்டுகால்'களை மீண்டும் அழைக்கும்போது, நிதானத்துடன் பேசுவதும், தேவையற்ற தகவல்களை தராமல் இருப்பதும் இதுபோல ஆபத்துக்கு வாசல் கால் வைக்காமல் காக்கும் என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டேன்!

No comments:

Post a Comment