Tuesday, December 13, 2011

தினம் ஒரு புதிர்


பின்வரும் புதிருக்கான கதையைக் கவனமாகப் படித்தபின், கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்கப் பாருங்கள்!
ஒரு மன்னன், ஒரு சிறிய ஊரை ஆண்டு வந்தான்.
அவனுக்கு ஒரு பயங்கரமான பழக்கம் இருந்தது.
அவன் விரும்பாத ஒன்றை யாராவது செய்தால்,
அவன் உடனே அவர்களைக் கொன்றுவிடுவான்.

ஒரு முறை, ஒரு சோதிடர் ( fortune-teller ) அந்த ஊருக்கு வந்தார்.
அந்த சோதிடரால், யார், எப்போது, இறந்துபோகப் போகிறார் என்பதைக் கணக்கிட்டு சொல்ல முடியும்.

இதை அறிந்த மன்னன், சோதிடர் அவனுடைய மரணத்தையும் கணக்கிட்டு கூறிவிடுவாரோ என்று பயந்தான்.

சோதிடர் அவ்வாறு செய்துவிடக் கூடாது, என்பதற்காக அவன், அவனுடைய அமைச்சனின் ஆலோசனையின்படியே அவரைக் கொல்லத் திட்டமிட்டான்.

மறுநாள், மன்னன் சோதிடரிடம், "நீங்கள் எப்போது இறக்கப் போகிறீர்கள் என்பதை உங்களால் கூறமுடியுமா?" என்பதைக் கேட்டு, சோதிடர் அதற்கு பதில் கூறிய பிறகு, அவரைத் தன் வாளால் வீழ்த்தி, "சோதிடர் ஒரு பொய்க்காரர்! யாரும் அவரை நம்பாதீர்கள்! பாருங்கள்! அவருக்கே அவரது மரணத்தைக் கணக்கிட்டு கூறமுடியவில்லை!" என்று அந்நாட்டு மக்களிடம் கூற விரும்பினான் அந்த மன்னன்.


ஆனால், நடந்ததோ வேறு......


மன்னன் சோதிடரிடம், "நீங்கள் எப்போது இறக்கப் போகிறீர்கள் என்பதை உங்களால் கூறமுடியுமா?" என்று கேட்டான்.

மன்னனைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த சோதிடருக்கு, மன்னன்மீது சந்தேகம் வந்தது.

அப்போது அவர், மன்னனிடம் ஒரு பதிலைக் கூறினார்.

பதிலைக் கேட்ட மன்னன், சோதிடரைக் கொல்லவில்லை.
உடனே, அவன் தன் வாளை மறைத்துக்கொண்டு,
சோதிடருக்குப் பொன்னும் பொருளும் அளித்து,
அவரைப் பார்த்துக் கொள்வதற்காக இரண்டு உடல் பாதுகாவலர்களையும் (bodyguards) நியமித்து,
அவரைப் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தான்.

சோதிடரைக் கொல்ல நினைத்த மன்னன்,
அவருடைய பதிலைக் கேட்ட பிறகு,
அவருக்கு இவ்வாறு உதவினான்.

No comments:

Post a Comment