
'அழகு என்பது ஒவ்வொரு உயிரிக்குள்ளும் இருக்கும் இயற்கை. எல்லா மனிதர்களிடத்திலும் ஏதோ ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது.
அதை உணரும் மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்கிற இடத்தில்தான், மேக்கப் இவர்களுக்கு அவசியம் என்ற நிலை ஏற்படுகிறது. ஒரு வாடிக்கையாளரைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர்... வாடிக்கையாளர் தன்னைக் கவனிக்கும்படி இருப்பதற்குக் காரணம் தவறான சமூகப் புரிதலே. பெரியார் சொன்னதுபோல், 'ஆணோ பெண்ணோ ரம்மியமாக இருக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்பதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்'' என்று பதிலை உதிர்த்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி.

''ஒரு பெண் செக்ஸுவலி ஆக்டிவா இருக்கிறாள் என்பதற்கான சிக்னல்தான் மேக்கப். அவள் ஓவலேஷன் எனப்படும் சூட்டில் இருக்கும்போது, அவளுடைய உடலில் ஏற்படும் ஃபிஸிக்கல் மாற்றம்தான் அதீத மேக்கப்புக்கு அடிப்படை'' என்றொரு கருத்தை, சமீபத்தில் விஜய் டி.வி. 'நீயா... நானா' நிகழ்ச்சியில் எடுத்து வைத்து, பலரையும் அதிர வைத்திருக்கும் மனநல மருத்துவர் ஷாலினி நினைப்பது என்ன?

''இயற்கையாகவே ஓர் ஆணுக்கு எல்லா விஷயத்தையும் மிகைப்படுத்திக்காட்ட வேண்டும். அந்த சூப்பர் நார்மல் ஃபீலைக் கொண்டு வருவதற்காகவே இன்று மேக்கப் அவசியமாகிவிட்டது. 'உனக்கு நான் சூப்பர் நார்மல் எஃபெக்டைக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பதிலாக இந்த வேலையை நீ முடித்துக் கொடு’ என்று வேகமாக வளர்ந்துவரும் இன்றைய வியாபார உலகத்தின் 'கிவ் அண்ட் டேக்’ மனப்பான்மை, மேக்கப் அவசியம் என்கிற மாயபிம்பத்தை உருவாக்குகிறது'' என்று எச்சரிக்கும் டாக்டர் ஷாலினி,
''இப்படி மேக்கப் போட்டு, மற்றவர்களை கவர்வதன் மூலமாக, பெண் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்பதைத்தானே திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். அழகு என்பது நம்மில் இருக்கும் விஷயம். அதை எந்த விலை பொருளாலும் அதிகரிக்கவோ, அதீதமாக உணர வைக்கவோ முடியாது. இந்த உண்மையை இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் உறுதியாக.
சட்டென்று தீர்ப்பு சொல்லக்கூடிய பட்டிமன்றமா இது?
No comments:
Post a Comment