தலை தீபாவளிக்கு வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர் முன்பே புதுப்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல்(24). கூலித்தொழிலாளியான இவருக்கும், சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் முனீஸ்வரி(19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

முனீஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை போதாது என்று சண்முகவேல் மற்றும் குடும்பத்தினர் முனீஸ்வரியை கொடுமைப்படுத்தினர்.
தலை தீபாவளிக்கு மகள் மற்றும் மருமகனை அழைத்து செல்ல கடந்த வாரம் சுப்பிரமணியன் கடையநல்லூருக்கு வந்தார். சண்முகவேல் குடும்பத்தினர் முனீஸ்வரியை அனுப்ப மறுத்தனர்.நேற்று முன்தினம் மீண்டும் சுப்பிரமணியனும், மனைவி பாஞ்சாலியும் மகள் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வெளியே நின்று மகளை தலை தீபாவளிக்கு அழைத்தனர்.அப்போது சண்முகவேல் அவர்களுடன் செல்ல மறுத்து, மனைவியையும் செல்லக்கூடாது என்று கூறினார். ஆனால் முனீஸ்வரி பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சண்முகவேல், அவரது தாய் மாடத்தியம்மாள்(50), அண்ணன்கள் முத்துசாமி(27), இசக்கி(29) ஆகியோர் முனீஸ்வரியை தாக்கி கீழே தள்ளி, பெற்றோர் கண் எதிரே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.உடல் கருகிய நிலையில் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முனீஸ்வரி பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் சண்முகவேல், மாடத்தியம்மாள், முத்துசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தார்
.
|
No comments:
Post a Comment