Saturday, November 26, 2011

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம் -அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்

அந்த பெண்ணுடன் சென்னையில் பணி புரிந்தவர்கள் வாயிலாகவும், பெண்ணின் பெற்றோர், தோழிகளை விசாரித்த போதும் சில கசப்பான உண்மைகள் தெரிய வந்தன.. அப்போதே அது பற்றி விளக்கப்பதிவு போட நினைத்திருந்தேன்..ஆனால் பெண்ணின் பெற்றோர் கொஞ்ச நாளுக்கு அது பற்றி எதுவும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். காரணம் துக்கம் விசாரிக்க வருபவர்கள் அது பற்றியே பேசி எங்கள் வேதனையை மேலும் அதிகரிப்பார்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அது பற்றி பதிவு போடுவதை தள்ளி வைத்தேன்..

இப்போது எல்லாம் ஆறிப்போய் இருப்பதால் வெளியிட சரியான தருணம் என தோன்றியது

சன் டி வியில் நிருபராக வேலை பார்த்த சங்கீதாவுக்கு அவரது அறைத்தோழி ஒருவருடன் ஓர் பால் உறவு ஏற்பட்டது.. தனது லெஸ்பியன் சிநேகம் குறித்து அவர் எந்த வித தயக்கமும் இன்றி தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.. எந்த பெற்றோர் தான் தமிழகத்தில் அதை ஒத்துக்கொள்வர்கள்?அவசர அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்..
சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையிடம் பெண்ணின் ஆஃபீஸ் அட்ரஸ் சொல்லி பார்க்க சொல்லி விட்டார்கள்.. பெண்ணிடம் கண்டிப்பாக திருமணம் செய்தே தீர வேண்டும் என கொஞ்சம் அழுகை, நிறைய கண்டிப்புடன் மிரட்டி இருக்கிறார்கள்.. சங்கீதாவுக்கு ஆணுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை.இருந்தாலும் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையிடம் அவர் எந்த உண்மையையும் சொல்லாமல் பெற்றோரின் விருப்பம் போல் மாப்பிள்ளையுடன் பேசி இருக்கிறார்.. 

அது வரை சங்கீதாவுக்கு தினமும் வெளியே சென்று ஃபீல்டு ஒர்க் வேலையாக இருந்த பணி அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஃபீஸ் விட்டு வெளியே போக முடியத படி ஆஃபீஸ் ஒர்க்காக மாற்றப்பட்டது.. சங்கீதாவின் தோழி சங்கீதாவின் பெற்றோரால் மிரட்டப்பட்டு வேறு இடம் அனுப்பப்பட்டார்.

சங்கீதாவால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. திருமணத்தில் இஷ்டம் இல்லை.. எனவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. 

தற்கொலை என்றால் என்ன காரணம்? என வெளியே சொல்வது? என்ற நியாயமான ஒரு பெற்றோருக்கே உரிய அச்சத்தில் விபத்தாக மாற்றப்பட்டது.. மற்றபடி சன் டி வி நிர்வாகத்துக்கும், அந்தப்பெண்ணின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

19.02.2011 சனி அன்று தான் சம்பவம் நடந்தது.. ஞாயிறு அன்றே அவரது உடல் சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டது.. அடுத்த நாளே அதாவது 21.02.2011 அன்றே அந்த பெண்ணின் குடும்பத்தார் நடத்தும் ஜவுளிகடை, ஃபேன்சி ஸ்டோர் எல்லாம் இயங்கியது.. பொதுவாக இது போல் துக்க சம்பவம் நடந்தால் குறைந்த பட்சம் 3 நாட்களாவது லீவ் விடுவார்கள். எனவே எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது தான் மற்ற தகவல்கள் தெரிய வந்தன.. 

மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் அல்லது தனது தோழியுடன் எங்காவது போய் விடுவார் என எதிர்பார்த்தே அவர்கள் இருந்திருகின்றனர்.. 



நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை செய்யத்தூண்டுகிறது.. 

2. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக தோன்றினாலும் குழந்தை நலன் கருதி படிக்கவோ, பணி புரியவோ வெளியூர் போகும் பெண்ணுடன் கூடவே அம்மாவும் போனால் நல்லது.. 

3. ஒரே அறையில் இரு ஆண்கள், அல்லது இரு பெண்கள் தங்குவது இந்தக்காலத்தில் தேவை அற்ற சர்ச்சைகள், பிரச்சனைகள் தோற்றுவிக்கும் என்பதை உணர வேண்டும்.. நான் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.. 

4. வெளியூரில் வேலை செய்தால் ரூ 30,000 சம்பளம் , உள்ளூரில் வேலை செய்தால் ரூ 10,000 சம்பளம் என்றால் எல்லோரும் வெளியூர் செல்லவே ஆசைப்படுகிறோம்.. பணத்தை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர வேண்டும்.. 

5. எல்லாவற்றையும் மீறி இது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது.. அவர்களே பட்டு தெரிந்து கொள்வார்கள்... இளம் வயதில் இப்போது தற்கொலை எண்ணங்கள் பட் பட் என வந்து விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

6. மன உறுதியுடன் பல ஆண்களும், பெண்களும் தனிமையில் , அல்லது கம்பைன் ஸ்டடி, கம்பைன் ஒர்க் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எல்லோரும் அப்படி அல்ல.. மன உறுதி இல்லாதவர்கள் தடம் புரள வாய்ப்பு உண்டு அவ்வளவுதான்

1 comment:

  1. அடடே, புது தகவலா இருக்கே? உங்க ஊர் மேட்டரா சார்?

    ReplyDelete