Saturday, November 26, 2011

கட்டையாகப் பிறப்பதற்கு என்ன காரணம் ?

ஒருவரது கட்டைத் தன்மைக்குக் காரணம் அவரது மரபணுக்களின் போதாமை தான் என ஓர் ஆய்வு கூறுகின்றது. உயரமென்பது குடும்பங்களில் வழிவழியாகத் தோன்றும் ஒரு மரபணு விடயம். ஒருவரின் உயரத்தில் வேறுபாடு இருப்பதற்கு 10 வீதமான குறிப்பிட்ட மரபணுவின் அம்சங்களையே இதுவரை விஞ்ஞானிகள் காரணங்காட்டி வந்தனர்.

ஆனால் மரபணுக்களின் அல்லது DNA இன் வேறு பிரிவுகளின் தவறவிடப்பட்ட விடயங்கள்தான் ஒருவரது உயரத்தில் அரைவாசியளவு தாக்கம் விளைவிக்கின்றன என ஆய்வாளர்கள் தற்போது நம்புகின்றனர்.

மரபணு அசாதாரண நிலைகளே இவ்வாறான மாற்றங்களைக் குறோமோசோம்களிற்கிடையில் செய்கின்றன.

இந்த குறோமோசோம்களில் தான் எங்களது மரபு இணைப்பைக் கொண்டுள்ள அமிலமான DNA இன் ஒன்று அல்லது பல பிரதிகள் காணப்படும்.

சில இடங்களில் இது குறோமோசோம்களிற்கு இடையிலேயே ஒரு தொடர்பினை ஏற்படுத்திவிடும்.

ஆனால் சிலவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மரபணுப் பிரதிகளின் ஒரு பகுதி அல்லது அதன் முழுப்பிரதியுமே தவறப்பட்டுவிடலாம் அல்லது அதனைப் போன்ற இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிடலாம்.

சில மரபணு அசாதாரண நிலைகள் பொதுவானவையாக இருந்தாலும் ஏனையவவை குறிப்பிட்டளவு பேரில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

இவ்வாறான வழமைக்குமாறான அசாதாரண மரபணு மாற்றங்கள் அழிந்த நிலையிலுள்ளவர்களில் மரபணுவின் ஒரு பாகமும் தவறுப்பட்டுவிடும். இவர்கள் தான் உருவத்தில் கட்டையாக வருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைவரிலும் இவ்வாறான சில நூற்றுக்கணக்கான தனித்தனியான மரபணுக்கள் அழிந்த நிலை இருந்தாலும் கட்டையானவர்களில் பல மில்லியன் கணக்கானவை காணப்படுமென்றனர்.

ஒவ்வொரு மில்லியன் அழிவுகளும் ஒருவரின் உயரத்தில் 1/8 அங்குலத்தைக் குறைக்கின்றதென 12,000 பேரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளைக் கொண்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

No comments:

Post a Comment