3 ' படத்தில் இடம் பெறும் ' WHY THIS KOLAVERI DI ' பாடலை யாரோ வலைதளங்களில் தயாரிப்பு தரப்புக்கு தெரியாமல் வெளியிட்டதால், அந்த ஒரு பாடலை மட்டும் அதிகாரபூர்வமாக ஆடியோ ரிலீஸ் செய்தார்கள்.

இப்பாடலை தனுஷ் எழுதி பாட, புதுமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
இந்நிலையில் ' 3 ' படத்தில் இருந்து இன்னொரு பாடல் தற்போது YOUTUBE இணையத்தில் வெளிவந்து இருக்கிறது. அப்பாடல் வரிகள் இங்கே:
உன்னை பெத்தவன் பெத்தானா செஞ்சானா
பதிலே தெரியாமா கிறுக்கு ஆனேன்..
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
அடி பெண்ணே உன் மேலேதானே லவ்ஸ் லவ்ஸ்
உன்னை கண்ட முதல் நாள் மத்தது எல்லாம் தினுசு தினுசு...
எம் மாமன் எம் மாமன் பெத்த முத்தழகியே
எம் மனசோரம் மல்லு கட்டும் பேரழகியே
ஏ பஸ் ஸ்டாண்டு ஓரத்துல முன்னப்போகும் ஓரத்துல
பின்னாலே நாய் போலே வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு உன்னை நான் டாவடிச்சு
காலத்த ஓட்டுரண்டி நாலஞ்சு மாசமா
காரித் துப்பினாலும் பீல் பண்ணா மனசு இது
கரெக்ட் பண்ணாம போகாது என் உசுரு
உன்னை நானும் வச்சுருக்கேன் ஹார்ட்டுபீட்டுல
கூட்டுட்டு போவேனே என் சொந்த வண்டியில
அய்யோ அவ லுக்கு அதுதான் செம கிக்கு
அவ ரெட்டை ஜடை கட்டின ஸ்டைலு மாமு
அதுல ஒத்த ரோஜா வச்ச அவ மாமா நானு
பட்டுவேட்டி கட்டிக்கிட்டு மஞ்சகலர் சொக்கா போட்டு
மாரியம்மன் திருவிழாவுக்கு வந்தேண்டி உன்ன தேடி
ஃபாரின் சென்ட் அடிச்சு பட்டிணத்து வாட்சு கட்டி
பம்பரம் போல உன்னை சுத்தி வந்தேண்டி
மனசுல நான் இருந்தும் ஏண்டி நீ மறைக்கிற
பதிலே சொல்லாம என் மனச உடைக்கிற
உங்கப்பன் கழுத்துல வைப்பேண்டி KNIFE
அப்புறம் நீதாண்டி என்னோட WIFE
WIFE WIFE WIFE... LIFE LIFE LIFE
உங்கப்பன் ஒரு TORTURE... உங்கண்ணன் ஒரு TORTURE..
எப்படி இதை சமாளிக்க போறேன் நானு
தெரியல பொண்ணே உன்னால கண்ணே உன்னால தொல்லை
உன்னால தூங்கி நான் பல நாளே ஆச்சு
' WHY THIS KOLAVERI DI ' பாடலை போல இந்த பாடலும் பரபரப்பாக பேசப்படுமா என்பது போகப் போகத் தெரியும். போகிற போக்கைப் பார்த்தால் படம் இசை வெளியீடு நடப்பதற்குள் எல்லாப் பாடல்களும் இப்படியே இணையத்தில் வெளியாகி விடுமோ?
|
No comments:
Post a Comment