Saturday, November 26, 2011

பஸ் கட்டண உயர்வும் பதிவு செய்யப்பட வேண்டிய உணர்வுகளும்!

சம்பவம் 1:


சென்னை - ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.. எண் 13 பஸ்சில் ஏறினார், ஒரு நடுத்தர வயதுப் பெண். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, தாம் இறங்கும் நிறுத்ததைச் சொல்லி டிக்கெட் கேட்டார். '9 ரூபா குடும்மா' என்றார் கண்டக்டர். 'பஸ்சை நிறுத்துங்க.. உங்ககிட்ட 9 ரூபா குடுக்குறதுக்கு நடந்தே போய்க்கிறேன்,' என்றார் சத்தமாக. அடுத்த நிறுத்தமான உட்லண்ஸ் தியேட்டரில் பஸ் நின்றது. விறுவிறுவென இறங்கிச் சென்ற அந்தப் பெண்ணைக் கண்ட சக பயணிகளிடையே நிசப்தம். முணு முணுப்புகள் தொடங்க சில நொடிகள் ஆனது.

சம்பவம் 2:
கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்த தினம். மாலை 6 மணியளவில் 27டி-யில் ஒரு துப்புறவு தொழிலாளி ஏறினார். காசை நீட்டி, ஸ்டாப் பெயர் சொல்லி டிக்கெட் கேட்டார். டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், '11 ரூபாய் கொடுப்பா' என்றார். அதிர்ச்சியுற்ற அந்தத் தொழிலாளி 'இன்னாப்பா இவ்ளோ கேட்குற?' என்று கேட்டபோது, கண்டக்டர் நிதானமாக விளக்கினார். "இன்னாப்பா அநியாயமா இருக்கு. இந்தா இதப்புடி. நாளைக்கு மீதி தர்றேன்," என்று தனக்கு நன்கு தெரிந்த ரூட் கண்டக்டரிடம் உரிமையுடன் கடன் சொன்னார், அந்தத் தொழிலாளி. 

அண்மைக்காலமாக இதுபோன்ற நிகழ்வுகளை பேருந்தில் பயணிக்கும் பலரும் தினம் தினம் கடந்து வருகிறோம். 

No comments:

Post a Comment