Saturday, July 9, 2011

கண்ணிமைக்கும் நேரத்தில்....

கம்ப்யூட்டரில் வெகு நேரம் வேலை பார்க்கிறவர்களுக்கு கண் அசதி வருவது உண்டு. திரையில் மினுக் மினுக் என ஒளிர்வதை அடிக்கடி பார்ப்பதால் உடலில் உள்ள உயரித்துடிப்பூட்டுகிற சக்தி மையமான காற்று சிரமத்திற்கு உள்ளாகிறது. ஆயுர்வேத மருத்துவ முறைப்படி நம் உடல் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் முதலியவற்றால் ஆனது. அடிக்கடி ஒளிரும் கம்ப்யூட்டர் திரையால் உணர்ச்சி மண்டலம் மூளை மற்றும் புலன் உணர்வு பற்றிய நரம்புகள் கூடுதலாக வேலை செய்கின்றன.


இப்படத்திரையைப் பார்த்து ஓய்வின்றி செய்வதால் உடலில் காற்று என்ற பஞ்சபூதம் சிரமத்திற்குள்ளாவதால் மனதில் இறுக்கம் ஏற்படுகிறது. உடனே கண்களும் ஓய்வை விரும்புகின்றன. இதை அறியாமல் மேலும் ஒளிரும் மினக் மினுத்திரையில் திடீர் திடீரென்று மூளைக்கு வேலை கொடுத்து உழைப்பினால் அதிக அலுப்பையே பலரும் பெறுகின்றனர்.
இதைத் தடுக்க அமெரிக்கரான ஜுடித் மாரிஸன் என்ற பெண் டாக்டர், ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதும் மசாஜ் செய்யச் சொன்னார். பிறகு முழங்கையிலிருந்து விரல் நுனி வரைத் தடவி நன்கு மசாஜ் செய்யச் சொல்கிறார். முகத்திலும் இந்த நல்லெண்ணையால் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வப்போது உங்கள் கம்ப்யூட்டருக்கு ஓய்வு கொடுத்து கைகள், விரல்களை, நன்கு அமுக்கி விடவும். நீட்டி மடக்கவும். முடிந்தால் அலுவலகத்திற்கு வெளியே வந்து, நல்ல காற்றை ஐந்து நிமிடமாவது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வாங்கிச் செல்லவும்!

கம்ப்யூட்டர் எதிரிலேயே உங்கள் கண்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை ஓய்வு கொடுத்து கண்களில் ஏற்படும் அலுப்பைப் போக்கவும். இதற்கும் இந்த ஆயுர்வேத மருத்துவர் யோசனை சொல்கிறார்.

இருக்கையில் உட்கார்ந்தபடியே முழங்கையை முழங்காலில் அல்லது கம்ப்யூட்டர் டெஸ்க்கில் வைத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொள்ளவும். உள்ளங்கையை விரல்களால் மூடவும். மூன்று நிமிடங்கள் இந்த நிலையில் இருக்கவும். காலையிலும் மதியமும் ஸ்கிரீனில் இருந்து புறப்படும்போது கண்களை மூடிக்கொண்டு அந்தப் பக்கம், இந்தப்பக்கம் மேலே, கீழே என்று விழிகளை திருப்பவும். ஒரு நிமிடம் கண்களைத் திறந்தபடியே எல்லாப் பக்கங்களிலும் ஒரு முறை இதுபோல் பார்த்துவிட்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது நல்லது. உங்கள் செளகரியப்படி இதை செய்து வந்தால் உங்கள் கண்ணின் தசைகள் ஒரே பக்கமாக பார்த்து வேலை செய்த அலுப்பிலிருந்து தப்பிவிடும்.

எழுத்தாளர்களும், கணக்கு வேலை பார்ப்பவர்களும், மூளைக்கும் கண்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்க வேண்டும். அவர்களும் இரவில் நல்லெண்ணெய் மசாஜ் செய்வதுடன், பகலில் விரல்கள், கைகள், தோள்பட்டை முதலியவற்றை பிடித்துவிட்டுக் கொள்ளவும். மேலும் கண்களுக்கும் பயிற்சி கொடுக்கவும். இது நல்ல பலனைத் தந்து வருகிறதாம்.

No comments:

Post a Comment