Thursday, March 24, 2011

ஒரு PC Video Game செய்ய 220 கோடி தேவையா? – என் வாயை பிளக்க வைத்த சில தகவல்கள்


சில வாரங்களுக்கு முன்னர் ஒரு Game Designer இன் அறிமுகம் கிடைத்தது. அவர் சீனாவை சேர்ந்தவர். அவருடன் பேசும் பொது ஒரு கேள்வியை கேட்டேன். “ஒரு PC Video Game ஐ செய்ய எவளவு செலவாகும் ? ” அவர் சொன்ன அடுக்கடுக்கான தகவல்கள் எனை ஆச்சரியபடவைத்தன.

சாதாரணமாக ஒரு Online flash Game ஐ செய்ய Minimum $500 ஆவது  தேவையாம் . Facebook இல் இருக்கும் MafiaWars, farmville , BarnBuddy போன்ற games ஐ செய்ய $20,000 – $40,000 தேவையாம். மேலும் அவற்றிற்கு Update, maintenance , staffs என மாதம் $10,000 ஆவது தேவையாம். இவ்வாறான games ஐ செய்வது இலகுவாம் ஆனால் கொண்டு நடத்துவது கஷ்டமாம்.
மேலும் ஒரு சாதாரணமான PC Game ( Project IGI-1 ஐ போல ) ஐ Windows இற்கு என செய்ய $18 million ( இலங்கை ரூபாய் 210+ கோடி ) தேவையாம். அதே விளையாட்டை xBox , PS2 , என பல platform களுக்கு என்றால் விலை $40 million வரை செல்லுமாம். மேலும் அவர்கள் தயாரித்த விளையாட்டை பரிசோதிக்க அங்கு “Game testers” என ஒரு தரப்பினர்கள் இருகிறார்களாம். அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $60 வரை கொடுக்கணுமாம். இதற்கே தனியாக $80,000 வரை தேவையாம். மேலும் விளம்பரம், விநியோகம், Store செலவு என எவளவோ இருக்காம்.                    ஆனால் செலவழித்த பணத்தை விட 2 or 3+ மடங்கு லாபம் உள்ளதாம். மேலும் Halo-3 என்ற Game தானாம் அதிக செலவில் தயாரிக்கப்படதாம். மொத்த செலவு இலங்கை மதிப்பில் 2200 கோடி க்கு மேல்.
தகவல் புதுமயானதாயின் இதை பகிரலாமே.

No comments:

Post a Comment