Thursday, March 24, 2011

ஏர்டெல் தந்த 5 லட்சம் 3ஜி இணைப்புகள்


3ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் அண்மையில் தான் பாரதி ஏர்டெல் நிறுவனம் சேர்ந்தது. சென்னை, பங்களூரு மற்றும் டில்லியில் இதன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடங்கிய ஒரு மாதத்தில் மொத்தம் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்காகப் பதிந்துள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. 
மார்ச் மாத முடிவிற்குள் மேலும் 13 மண்டலங்களில் உள்ள நகரங்களில், 3ஜி சேவையினை நீட்டிக்க ஏர்டெல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 எம்.பி. டவுண்லோட் செய்திட ரூ.11 கட்டணம் என்ற அளவில் தொடங்கி, பல்வேறு கட்டண நிலைகளில், ஏர்டெல் தன் சேவைகளை வழங்கி வருகிறது. மாதம் ரூ.750 கட்டணத்தில் 2 ஜிபி டேட்டா டவுண்லோட் செய்திடும் திட்டத்தினையும் தருகிறது. 
3ஜி சேவை வழங்க ஏழு நகரங்களில் 4,500 சைட்களை ஏர்டெல் நிர்மாணித்துள்ளது. டில்லியில் மட்டும் 1,800 சைட்கள் உள்ளன. விரைவில் இந்தியா முழுவதும் 3ஜி சேவை வழங்கிடத் திட்டங்கள் கொண்டுள்ளதாக, ஏர்டெல் நிறுவன அதிகாரி அதுல் பின்டால் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment