![[Image: veganmeals1244755224569.jpg]](http://img651.imageshack.us/img651/5334/veganmeals1244755224569.jpg)
ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.
|
No comments:
Post a Comment