Thursday, March 24, 2011

கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி


இணையத்தில் உலா வரும் போது ஒருசில குறிப்பிட்ட தகவல்களை சேமித்து கொள்ள பயனாளர்கள் விரும்புவர். முக்கியமாக எழுத்துக்களையே அதிகமாக காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டாக சேமித்து வருவோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து வருவோம். பெரிய கோப்பாக இருந்தால் பரவாயில்லை சின்னஞ்சிறு சொற்றொடர்களை கூட இதுபோன்றே காப்பி செய்து பேஸ்ட் செய்வோம். இதனால் கால விரயம் மட்டுமே ஆகும். ஒரு சில நேரங்களில் ஒரு பகுதி சொற்றொடர்களை காப்பி செய்து விடுவோம் ஆனால் பேஸ்ட் செய்ய மறந்து விடுவோம், இல்லையெனில் இன்னொரு சொற்றொடர்களை காப்பி செய்திடுவோம் இதனால் நாம் அதற்கு முன் காப்பி செய்த சொற்றொடரானது நீக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இதற்கான வசதி இல்லை, ஆனால் இணைய உலவியான கூகுள் குரோமில் இது சாத்தியம். இந்த உலவியில் Pastey என்னும் நீட்சியின் உதவியுடன் இதுபோன்ற காப்பி,பேஸ்ட் செயல்களை மிக எளிமை செய்ய முடியும். அதற்கு முன் காப்பி, பேஸ்ட் என்ற வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள் ஆகும். இதற்கான தமிழ் அர்த்தங்கள் காப்பி - நகலெடுத்தல், பேஸ்ட் - ஒட்டுதல் , கட் - நகர்த்துதல், இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் வாசர்களுக்கு சற்று தடுமாற்றம் ஏற்படும் என்பதால் இந்த பதிவில் காப்பி, பேஸ்ட் என்ற வாத்தையினையே பயன்படுத்தி உள்ளேன். 

நீட்சியை தரவிறக்க சுட்டி


கூகுள் குரோம் உலவியில் நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரின் பக்கத்தில் ஒரு Pastey ஐகான் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். அதை ஒப்பன் செய்தும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இல்லையெனில் எந்தெந்த சொற்றொடர்களை தனியே சேமிக்க வேண்டுமோ அந்த சொற்றொடர்களை தேர்வு செய்து கொண்டு, சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Copy selected to Pastey என்பதை அழுத்தியும் சொற்றொடர்களை சேமித்துக்கொள்ள முடியும்.



காப்பி செய்த சொற்றொடர்களை பேஸ்ட் செய்ய வேண்டுமெனில் Pastey ஐகானை அழுத்தி வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இந்த நீட்சியானது இணையத்தில் தகவல்களை  தேடி அலைந்து சேகரிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வலைப்பக்கத்தில் காப்பி செய்த சொற்றொடர்களை மற்ற இடங்களிலும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment