Thursday, March 24, 2011

பொருட்கள் விலை உயர்வு: 10.05 சதவீதமானது உணவுப் பணவீக்கம்

டெல்லி: உணவுப் பொருள்களின் விலைகள் உயரத் தொடங்கியுள்ளதால் உணவுப் பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்ந்தது. 


மார்ச் 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கான பணவீக்கப் புள்ளிகள் விவரம் இன்று காலை வெளியிடப்பட்டது. இதற்கு முந்தைய வாரத்தில் 9.42 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், இந்த வாரத்தில் 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காய்கறிகள், உணவு தானியப் பொருள்கள் என அனைத்துப் பொருள்களின் விலையிலும் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாலேயே இந்த மாறுதல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் இறுதி வாரத்தில் உணவுப் பணவீக்கத்தை 8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்திவிட மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment