Sunday, March 27, 2011

Password னா எப்படி இருக்கனும்.?


கடவுச்சொற்கள் (passwords) அமைப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது.
நீங்கள் நிறைய (ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட) இணையத்தில் பயனாளர் கணக்கு (User Account) வைத்திருப்பவரானால், எல்லா கணக்கிற்க்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்துவதை முதலில் தவிற்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஏனேனில் உங்களின் ஒரு இணைய கடவுசொல்லை திருடினால், மற்ற
அனைத்து கணக்குகளும் திருடப்படும் அபாயம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு இணையத்திற்க்கு ஒவ்வொரு கடவுசொல்லை பயன்படுத்தினால் மறந்து விடுவதும் இயல்பு. இந்த பிரச்சனைக்கு தீர்வாக என்ன செய்யலாம்? என்பதை இங்கு காணலாம்.
1. முதலில் உங்களுக்கு நினைவில் இருக்கும் படியான ஒரு வாக்கியத்தை எடுத்து கொள்ளவும்.
2. பிறகு அதில் வரும் எண்கள் ஒலி கொண்ட வார்த்தைகளை எடுத்து அதை எண்களாக மாற்றி கொள்ளவும். உதாரணத்திற்க்கு,
for -> 4
to -> 2
nine -> 9
3. அந்த வாக்கியத்தில் வரும் எல்லா வார்த்தைகளின் முதல் எழுத்துக்களையும் எடுத்து எழுதி கொள்ளவும்.
4. அடுத்து, சில சிறப்பு எழுத்துக்களை (special characters) சேர்த்துக் கொள்ளவும். (!@#$%^&*)
5. இப்பொழுது உங்களின் கடவுசொல்லின் ஒரு பகுதி தயார். இப்பொழுது இதை ஒவ்வொரு இணையத்திற்க்கு ஏற்றாற்போல் மாற்ற வேண்டும்.
6. பயன்படுத்த போகும் குறிப்பிட்ட இணை பெயரின் குறைக்கப்பட்ட சொல்லை எடுத்துக்கொள்ளவும். உதாரணத்திற்கு
Google
என்றால், Gle
Amazon
என்றால், Amz
Facebook
என்றால், Fbk
இதை அப்படியே நீங்கள் உருவாக்கிய கடவுசொல்லுடன் சேர்த்து கொள்ளவும்.
செய்முறை வீடியோவை பார்க்கவும்.
இம்முறையில் வெவ்வேறு இணையதளங்களிற்க்கான வெவ்வேறு கடவுசொற்களை உருவாக்குவது எளிது. மேலும் அதை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதும் சுலபம்.
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதவும்.

No comments:

Post a Comment