Sunday, March 27, 2011

ஜப்பானின் அணு உலையும், மழையும், பிடாடைனும், கேடயச்சுரப்பியும், போலி குறுஞ்செய்தியை மேலனுப்புதலும்



இதோ இந்த படத்தில் நீங்கள் பார்ப்பதை கேடயச்சுரப்பி கேடயம் (Thyroid Shield) என்று அழைப்பார்கள்


இதை கழுத்தை சுற்றி அணிந்தால் இப்படி இருக்கும்
இதோ இந்த அக்கா அணிந்திருக்கிறார்களே, அப்படித்தான்


இதோ மற்றொரு படம்

இது எதற்கு தெரியுமா

நம் கழுத்தில் கேடயச்சுரப்பி (thyroid gland) என்று ஒரு நாளமில்லா சுரப்பி (endocrine gland) உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும்



ஆனால் கதிரியக்கத்தால் (Radiation) இது அதிகம் பாதிக்கப்படும் ஒரு உறுப்பு. கதிரியக்கம் என்பது அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும், இந்த உறுப்பை அதிகம் பாதிக்கும் என்பதால்

ஒருவர் கதிரியக்கதினால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் அவர் இதை கழுத்தில் அணிவது அவருக்கும், அவரது கேடயச்சுரப்பிக்கும் நலம். எனவே ஊடுகதிர் பரிசோதனை மேற்கொள்ளும் பிணியாளரும், அந்த அறையில் இருக்கும் மருத்துவர்கள் அல்லது பிற பணியாளர்களும் இதை அணிவார்கள்

ஏன் இதை அணிகிறார்கள் என்றால், இதை அணிந்தால் தான் கேடயச்சுரப்பிக்கு பாதுகாப்பே தவிர வெறும் பிடாடைனை கழுத்தில் தடவினால் அது கதிரியத்திலிருந்து பாதுகாக்காது



“கழுத்தில் பிடாடைன் (betadine) தடவி ஜப்பானிய கதிரியக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்கவும்” என்று வரும் குறுஞ்செய்தியை (SMS), மின்னஞ்சலை (E Mail) அடுத்த முறை மேலனுப்பும் (forward) முன்னர் வெறும் பிடாடைன் கதிரியகத்திலிருந்து பாதுகாக்காது என்பதாலேயே கேடயச்சுரப்பி கேடயம் என்ற ஒரு பொருளை பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும்

No comments:

Post a Comment