
மோட்டார் இயந்திரத்தால் செயற்படுத்தப்படும் வழமையான செயற்கை கரத்துக்கு பதிலாக மனித மூளையால் இயங்கும் செயற்கை கரமொன்றை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரத்தை இழந்த ஜெஸி சுலிவன் என்பவருக்கே இந்த செயற்கை கரம் பரிட்சார்த்தமாக பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது.
அவருக்கு முதன்தலாக 8 ஆண்டுகளுக்கு முன் செயற்கைக்கரம் பொருத்தப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக அக்கரம் மேம்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக செயற்கைக் கரத்தின் கம்பி இணைப்புக்களை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவன் மார்பு தசைகளுடன் விஞ்ஞானிகள் இணைத்தனர்.
இதன்போது செயற்கைக் கரமானது மூளையின் சமிக்ஞைகளை மார்பு தசைகளின் ஊடாக பெற்று துல்லியமான அசைவுகளை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க நோர்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை கரங்களை கட்டுப்படுத்துவதில் வெவ்வேறு மூளை செயற்பாடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
|
No comments:
Post a Comment