Sunday, March 27, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஜாதிச் சாயம் பூசும் கருணாநிதி: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு


சென்னை: நாட்டையே உலுக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை ஜாதிச் சாயம் பூசி மறைக்க முயற்சி செய்யும் தமிழக முதல்வரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உலகம் கேட்டிராத அளவுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.

எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் தான் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கருணாநிதி இது ஆர்யத்திற்கும், திராவிடத்திற்கும் நடக்கும் போர் என்றெல்லாம் கூறி விஷயத்தை திசை திருப்ப முயல்கிறார்.

அரசியல் சாசனத்தின்படி கல்வி, வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கண்டனத்தையும் பொருட்படுத்தாது அருந்ததியர் சமுதாயத்துக்கென 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு அளித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், மதுரை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்களுக்கான நியமனம் நடந்தது. இதில் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு அருந்ததியர் சமுதாயத்திற்கே முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment