Sunday, March 27, 2011

உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க


இந்த பிஸி உலகில் பெண்கள் வேலைக்கும் சென்று , வீட்டிலேயும் வேலை செய்து லேட்டாக தூங்க செல்வார்கள். ஒழுங்கான நேரத்திற்கு தூங்க செல்லாதது உங்கள் தோலுக்கு அதிக கெடுதலை கொடுக்கும்.


உங்கள் முகம் பொலிவோட இருக்க அதிக பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்கு சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க ஒரு எளிமையான அட்வைஸ் தருகின்றேன். 


ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக ஸ்லைஷ் பண்ணி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் கழுவுங்கள்.


அதன் பிறகு உங்கள் முகம் கண்ணாடி போல பளபளனு இருப்பதை உணர்விர்கள். காலையில் உங்கள் கணவர் உங்கள் அருகில் வந்தால் உங்களை முத்தமிட வருகிறார் என்று நினைக்காதீர்கள். கண்ணாடியை தொலைத்து விட்டு சேவிங் செய்ய கண்ணாடியில்லாததால்தான் உங்கள் அருகில் வருவார், காலை நேரத்தில் நம்ம ஆட்களுக்கு ரொமன்ஸ் மூடு ஏதுவும் வராதுங்கோ...

கடைசியாக ஆண்களுக்கும் ஒரு குறிப்பு. நீங்களும் இந்த குறிப்பை கடைப்பிடிக்கலாம்.அதன் பிறகு சிவாஜி படத்தில் வரும் ரஜினியை போல பளபளக்காலாம்.

No comments:

Post a Comment