Sunday, March 27, 2011

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
மகா சிவராத்திரி விழாவில், கொதிக்கும் நெய்யில் கையை விட்டு 80 வயது மூதாட்டி அப்பம் சுடும் நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் நடந்தது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருவில்லிபுத்தூர் வடக்கம்பட்டி தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா களைகட்டியது.
இங்கு 80 வயதான மூதாட்டி முத்தம்மாள், கடந்த 46 ஆண்டுகளாக மகா சிவராத்திரியன்று கோயிலில், கொதிக்கும் நெய்யில் கை விட்டு அப்பம் சுடுவது வழக்கம்.நேற்றுமுன்தினம் இரவு 47வது ஆண்டாக அப்பம் சுடுகிற நிகழ்ச்சி நட
ந்தது. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்த முத்தம்மாள், பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயில் பூசாரி அடுப்பை பற்ற வைக்க, கோயிலுக்கு காணிக்கையாக வந்த நெய்யை சட்டியில் ஊற்றி கொதிக்க வைத்தார். நள்ளிரவு 12 மணியானதும், பெண் பக்தர்கள் குலவை ஒலி எழுப்ப, கொதித்துக் கொண்டிருந்த நெய்யில் முத்தம்மாள் சாதாரணமாக கையை விட்டு, அப்பங்கள் சுட்டார். இரவு 12 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 5 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்தனர். அவர் சுட்ட அப்பங்கள், பத்ரகாளியம்மனுக்கு அதிகாலையில் படைக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment