Sunday, March 27, 2011

மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்

அமெரிக்காவில் 28 வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ள 100 வயது ஆணும், 93 வயது பெண்ணும் தான் உலகின் வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளாகவிருக்கின்றனர்.


கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள் பாரஸ்ட் லன்ஸ்வே(100) மற்றும் ரோஸ் போல்லர்ட்(93). அவர்களுக்கு கடந்த 19-ம் தேதி தான் திருமணம் நடந்தது. இதையடு்தது உலகின் மிக வயதான தம்பதிகள் என்ற பெயரை பெறவிருக்கின்றனர்.

நாட்டியத்தில் விருப்பமுள்ள இருவரும் கடந்த 1983-ம் ஆண்டு கம்யூனிட்டி சென்டரில் உள்ள நாட்டிய வகுப்பில் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக நடனம் ஆடத் தொடங்கினர். தற்போது 28 வருட காதலுக்குப் பிறகு பாரஸ்டின் 100-வது பிறந்த நாளன்று திரு
மணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து ரோஸ் கூறியதாவது,

நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால் கடந்த வருடம் அவர் கேட்டபோது சம்மதித்துவிட்டேன். அவரிடம் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என்பதை தெரிவித்துவிட்டேன்.

இந்நிலையில் ஒரு நாள் அவர் நாம் எப்படி திருமணம் செய்யவேயில்லை என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் நீங்கள் என்னிடம் கேட்டதே இல்லை என்றேன். உடனே அவர் மண்டியிட்டு நான் இப்போது கேட்கிறேன், எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். உங்களின் 100-வது பிறந்தநாளன்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன். அவ்வாறே செய்தேன் என்றார்.

பாரஸ்ட் கூறுகையில்,

நான் கேட்பேன் என்று அவர் நினைத்தே இல்லை. அவர் சம்மதிப்பார் என்று நானும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இரண்டுமே நடந்தது. சந்தோஷமான ஆண்டுகள் இன்னும் இருக்கின்றன.

நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அவர்கள் இருவரின் வயதைச் சேர்த்தால் 193 ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கார்டன், எட்னா ஹால்போர்ட் தம்பதி தான் தற்போதைய வயதான தம்பதிகள். அதாவது வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஆகும். இங்கிலாந்து தம்பதிகள் வயதைச் சேர்த்தால் 183 வரும்.

No comments:

Post a Comment