Wednesday, December 7, 2011

கூகுல் தேடல் (Google Search) – இணையதளத்தில் ஒரு அற்புத வழிகாட்டி – பகுதி 2

கூகுல் சர்ச் (Google Search) மூலம் எத்தகைய கணக்கு முறையையும் எளிதாக எப்படி செய்வது என்பதை முதல் பகுதியில் பார்த்தோம்.


அதன் தொடர்ச்சியாக இன்னும் பல சர்ச் செய்யும் நுட்பங்களையும் பல சிறப்பு அம்சங்களை யும் காண்போம்.
வானிலை (Weather):

எந்த ஊரிலும் உள்ள வானிலையை கூகுல் மூலம் அறிந்து கொள்ளலாம். “weather” என டைப் செய்து பின் உங்கள் ஊரின் பெயரை அருகில் டைப் செய்ய வேண்டும்.


மேலும் செல்சியஸ் (Celsius)மற்றும் பாரன்ஹீட்(Fahrenheit) வடிவிலும் மாற்றி கொள்ளலாம்.


நேரத்தை அறிந்து கொள்ள (Time):

எந்த ஊரின் நேரத்தையும் அறிந்து கொள்ள “time” என டைப் செய்து பின் அந்த ஊரின் பெயரை டைப் செய்தால் போதும்.


சூரிய உதயம் (Sunrise) மற்றும் சூரிய அஸ்தமம் (Sunset):

சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் நேரத்தை காட்டி விடுவதோடு இன்னும் எவ்வளவு நேரத்தில் உதயமாகும் அல்லது அஸ்தமம் ஆகும் என்பதையும் காட்டி விடுகிறது.


நாணய மதிப்பு (Currency Rate):

எந்த ஊரின் நாணய மதிப்பையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.


அலகு மாற்றம் (Unit Conversion):

கூகுல் சர்ச் மூலம் எந்த அலகு முறைகளையும் மற்ற எந்த அலகு முறைக்கும் எளிதாக மாற்றி விடலாம்.


விளக்கங்கள்
ஒரு வார்த்தை அல்லது சொல் அமைப்பின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு, “define” என்ற வார்த்தையையும், பிறகு ஒரு இடைவெளிவிட்டு, விளக்கப்பட வேண்டியை வார்த்தை(களை) டைப் செய்யவும்.


மேலும் பல சர்ச் செய்யும் நுட்பங்களை அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்.




Google search தொடரும்…

No comments:

Post a Comment