Wednesday, December 7, 2011

கூகுல் தேடல் (Google Search) – இணையதளத்தில் ஒரு அற்புத வழிகாட்டி – பகுதி 1

இன்றைய நவீன உலகில் கூகுல் சர்ச் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. இதன் சிறப்பு அம்சம் கோடிக்கணக்கான வலை பக்கங்களுக்கு எளிதான அணுகுதலை அளிப்பதுடன் கூடுதலாக, நீங்கள் எதிர்பார்ப்பவற்றை ஒரு சில நொடிகளில் சரியாகத் தேட உதவுவதற்காக,Google பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இதனால் google (www.google.com) இன்றும் உலகின் நம்பர் 1 இணையதளமாக உள்ளது.


நம்மில் பலரும் எதையாவது ஒன்றை இணையதளத்தில் தேடுவது என்றால் google க்கு சென்று தான் விரும்பிய வார்த்தையை Search செய்வோம் . Google இணையதளம் நம்முடைய வேலைகளை எளிதாக்குவதற்காக பல சர்ச் செய்யும் நுட்பங்களையும் உள்ளடக்கயுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் google Search இல் உள்ளடங்கியுள்ள பல தேடுதல் நுட்பங்களை இந்த கட்டுரையின் மூலம் கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com) பல பகுதிகளாக தெரிவிக்க விரும்பிறது.
1. Google ஒரு கால்குலேட்டர்

கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் பொது ஏதேனும் கணக்கு போடவேண்டுமானால் நம்மில் பலரும் செய்யும் வேலை இது தான்.

1 . கால்குலேட்டரை தேடுவது

அல்லது

2 . கம்ப்யூட்டர் இல்

(START பட்டனை கிளிக் செய்வது)

“Calc” என்ற வார்த்தையை டைப் செய்வது

பின்னர் வரும் கால்குலேட்டரில் கணக்கிடுவது.

(www.kalvikalanjiam.com)

ஆனால் Google சர்ச் மூலம் எத்தகைய கணக்கு முறையையும் எளிதாக எப்படி செய்வது என்பதை பார்போம்.

கூகுளை ஓபன் செய்து சர்ச் இல் நீங்கள் விரும்பிய கணக்கு முறைகளை Search செய்வது போல செய்யலாம். கீழ்க்காணும் படங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்கும்.


(www.kalvikalanjiam.com)

கீழ்காணும் கணக்கு முறைகளை நீங்கள் சோதித்து பாருங்கள் :

கூடல் மற்றும் பெருக்கல்

(1+2)*3

வகுத்தல்:

150/5

அடுக்கு(exponentiation):

5^3 [அதாவது 5*5*5]

படிவம் (modulo): வகுபட்டதில் மீதமுள்ள தொகை:

20%3

சதவீதம்(Percentage): ஒரு முழு எண்ணில் இருந்து குறிப்பிட்ட சதவீத மதிப்பை கணக்கிடுவது

20% of 150

Square ரூட் (Square root):

sqrt(9)

திரிகோணகணித செயல்பாடுகள் (trigonometric functions): Sin, Cos, Tan….

sin(pi/3)
tan(45 degrees)

மடக்கை (logarithm)

log(1,000)

காரணி (factorial)

5!

“in” என்ற வார்த்தையை உபயோகித்து அலகுகள் (Units) முறைகளையும் கணக்கிடலாம்:

5 km in miles

5 kilometers in miles

(www.kalvikalanjiam.com)

இன்னும் சுலபமாக குரோம் பிரவுசர் (Chrome Browser) பயன்படுத்துவோர் அட்ரஸ் பாரில் உங்கள் கணக்கை டைப் செய்தால் விடையை தானாகவே காட்டி விடும். (www.kalvikalanjiam.com)

No comments:

Post a Comment