Tuesday, December 21, 2010

ஒரு பெண்ணின் அலறலும் டிவிட்டர் புகழும்

 

கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோதமானது.கொஞ்சம் சுவாரஸ்யமானது.


கிரிக்கெட் ரசிகர்களுக்கென்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன.போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அவர்களால் ஸ்கோர் என்ன என்று கேட்காமல் இருக்க முடியாது.அதே போல முக்கியமான மோதல்களின் போது அவர்களால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியாது.அலுவலம் ,வீடு ,பஸ் பயணம் என எல்லா இடங்களிலும் போட்டியின் போக்கு குறித்து தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வாதிடுவதில் கிரிக்கெட் ரசிகனுக்கு உள்ள இன்பத்தையும் ஆர்வத்தையும்  இன்னொரு கிரிக்கெட் ரசிகனாலேயே அறிய முடியும்.
இப்போதெலாம்  கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டரில் விவாதிக்க துவங்கி விட்டனர்.கிரிக்கெட் போட்டி நடக்கும் காலத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் பதிவுகளையும் பாரட்டுகளையும் புலம்பல்களையும் தவறாமல் பார்க்கலாம்.
இப்படி தான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் போது டிவிட்டரில் கிரிகெட் சார்ந்த பதிவுகள் மேலெழுந்தன.டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு இடையே எத்தனையோ டெஸ்ட் போட்டிகள் நடந்து வந்தாலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு.இந்த மோதலுக்கு ஆஷஸ் என அழகான பெயரும் கிரிக்கெட் வட்டாரத்தில் உண்டு.


டிவிட்டர் உலகிலும் தீ ஆஷஸ் என்னும் பதம் முன்னிலை பெற்றது.இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதல் தொடர்பான பதிவுகள் தீ ஆஷஸ் என்னும் அடைமொழியின் கீழ் தொகுக்கப்பட்டன்.டிவிட்டர் அகராதியில் ஹாஸ்டேகாக பயன்படுத்தப்பட்டது.ஆஷஸ் தொடர் தொடர்பான பதிவுகளை தேடியவர்கள் இந்த பதத்தை பயன்படுத்தினர்.
ஆஷஸ் விவாதத்தில் தங்கள் பதிவு மேலோங்க வேண்டும் என்று எத்தனையோ ரசிகர்கள் ஆசைப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றும் பலர் விரும்பியிருக்கலாம்.

ஆனால் யாருமே எதிர்பாராத அவகையில் அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு இந்த நட்சத்திர அந்தஸ்து போய் சேர்ந்த்து.கிரிக்கெட்டும் தெரியாத ஆஷஸ் தொடரையும் அறியாத அந்த பெண் ஆஷஸ் தொடரால் புகழ் பெற்றது தான் விநோம்.
எல்லாம் அந்த பெண்ணின் டிவிட்டர் புனைப்பெயரில் இருந்து துவங்கியது.
எழுத்தாளர்கல் மட்டும் தான் புனைப்பெயர் வைத்து கொள்ள வேண்டுமா என்ன?டிவிட்டரில் கூட பாலரும் புனைப்பெயரை பயனாளி பெயராக வைத்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலே சொன்ன அம்மணி தீ ஆஷஸ் என்னும் புனைப்பெயரில் டிவிட்டரில் செயல்பட்டு வந்தார்.டிவிட்டர் பரவலாக அறியப்படாத 1007 ம் ஆண்டு முதலே அவர் டிவிட்டர் கணக்கை இந்த பெயரில் பயன்படுத்தி வருகிறார்.இந்த பெயரை அவர் வைத்து கொன்டதற்கு எந்த பிரத்யேக காரணமும் இல்லை.அது அவரது காதலன் சூட்டிய பெயர் என்பதை தவிர.
டிவிட்டருக்கு ஒரு பெயர் தேவை என்பதால் காதலன் தன்னை ஆசையோடு அழைக்கும் செல்லப்பெயரான தீஆஷஸ் என்ர பெயரிலேயே அவர் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.குழந்தைகளை கவனித்து கொள்ளும் பணிப்பெண்ணாக அவர் வேலை பார்த்து வந்ததால அவரது பதிவுகலும் குழந்தை நலம் சார்ந்தே இருந்தன.

பேஸ்பால் தேசமான அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் கிரிக்கெட் பற்றி அவர் அறிந்திருக்கவும் இல்லை.கிரிக்கெட் குறித்து பதிவிட்டதும் இல்லை.ஆனாலும் ஆஷஸ் தொடர் சூடு பிடிக்க துவங்கியதும் டிவிட்டரில் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை கிடைத்தது.
காரணம் பெயர் குழப்பம் தான்.
ஆஷஸ் தொடர்பான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டவர்கள் அவை சக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் படவேண்டும் என்பதற்காக டிவிட்டர் வழக்கப்படி அதன் மைய பொருளான ஆஷஸ் தொடரை குறிக்கும் வகையில் தீ அஷஸ் என டேக் செய்தனர்.இப்படி டேக் செய்வதற்கு டிவிட்டரில் ஒரு குறீயீடு(#) உள்ளது.# இப்படி அடையாளம் காட்டினால் அந்த பதம் தொடர்பான பதிவுகள் ஒன்றாக தொகுக்கப்படும்.

சிஅல் ரசிகர்கள் அவசரத்தில் # என குறிப்பிதவதற்கு பதிலாக @ தீ அஷஸ் என குறிப்பிட்டனர். @ என்பது டிவிட்டர் அகராதியில் ஒரு பயனாளியின் டிவிட்ட முகவரியை குறிக்கும்.ஆக @ தீஆஷஸ் என்று குறிப்பிடப்பட்ட பதிவுகள் எல்லாம் டிவிட்டரில் உள்ள அமெரிக்க பெண்மணி தீ அஷஸ் பதிவுகள் போல ஆகிவிட்டன.

ஆஷஸ் மீதும் கிரிக்கெட் மீதும் ஆர்வம் கொண்ட பலர் இந்த முகவரியானது ஆஷஸ் தொடருக்கானது என்னும் நினப்பில் அதனை ஆர்வத்தோடு பின்தொடர்ந்தனர்.சிலர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
அமெரிக்க பெண்மணிக்கு இந்த தீடிர் ஆரவம் குழப்பத்தை ஏற்படுத்தியது.அதோடு அவர் என்னவென்றே அறியாத ஆஷஸ் தொடர் குறித்து அந்நியர்கள் தன்னிடம் கருத்து தெரிவித்தது குழப்பத்தோடு கோபத்தையும் உண்டாக்கியது.

ஆரம்பத்தில் எல்லோருக்கு  பொருமையாக விளக்கம் சொல்லி பார்த்தார். ஆனால் மேலும் மேலும் புதியவர்கள் அவரது பின்தொடர்பாளராகி இங்கிலாந்து ஆஸி போட்டி குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆஷஸ் தொடருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை;தயவு பிந்தொடர்வதற்கு முன் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொருக்கும் கூறி வந்த அவர் ஒரு கட்டத்தில் மிகவும் ஆவேசமாகி ‘நான் ஒன்றும் கிரிக்கெட் போட்டியில்லை’ என்று பதிவிட்டார்.அதற்குள் பல்ரும் இந்த பதிவை மறு டிவீட் செய்திருந்தனர்.இதனால் டிவிட்டர்வ் உலகில் பரப்ரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தான் அந்த பெண்மணி நான் ஒன்னும் கிரிக்கெட் போட்டி இல்லை என அலறியிருந்தார்.
உரத்த குரலினால் ஆன இந்த மறுப்பு டிவிட்டர் பயனாளிகளின் கவனத்தை ஈர்த்தது.உடனே நாளிதழ்களும் இந்த குழப்பம் பற்றி பரபரப்பாக செய்தி வெளியிட்டன.விளைவு அந்த பெண்மணி டிவிட்டர் உலகில் திடிர் நட்சத்திரமாகிவிட்டார்.

தீ ஆஷஸ் என பெயர் வைத்திருந்த்தால் அவர் பட்ட பாடு குறித்து பலரும் பேசித்தீர்த்தனர்.
இந்த கதை இத்தோடு முடிந்திருக்க வேண்டும்.ஆனால் அந்த பெண்மணி எதிர்பார்க்காத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.
நான் ஒன்றும் கிரிக்கெட் போட்டி இல்லை என அறிவித்த பின் கொஞ்சம் சாந்தமான அந்த பெண் எல்லாம சரி விக்கெட் என்றால் என்ன என்று அப்பாவியாக கேட்டிருந்தார்.

அட கிரிக்கெட்டும் தெரியாத விக்கெட்டும் தெரியாத அப்பாவி இவர் என நினைத்து பரிதாபப்பட்ட ரசிகர்கள் சிலர் அவரை ஆஷஸ் தொடரை நேரில் பார்க்க வைக்க வேண்டும் என்று விரும்பினர்.
இதற்காக ஆஷஸை ஆஷஸ் தொடருக்கு அனுப்பி வையுங்கள் என்னும் குறிப்போடு டிவிட்டர் பதிவுகளை வெளியிட துவங்கினார்.நூற்றுக்கணக்கானோர் இதில் சேர்ந்து கொள்ளவே இந்த கோரிக்கை ஒரு இணைய இயக்கமாகவே உருவானது.
டிவிட்டரில் உலகில் இந்த கவனத்தை ஈர்க்கவே விமான சேவை நிறுவனம் ஒன்று அவரை ஆஷஸ் போட்டியை காண ஆஸ்திரேலேயாவுக்கு இலவசமாக அழைத்து செல்ல முன்வருவதாக அறிவித்தது.
முதலில் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அவருக்கு தெரியவில்லை.டிவிட்டர் மூலம் யாரும் தொடர்பு கொண்டு தொல்லை தரக்கூடாது என  நினைத்த அவர் செல்பேசி மூலம் டிவிட்டர் தகவலை பெறும் வசதியை முடக்கி வைத்துவிட்டார்.எனவே விமான சேவை சலுகை அவருக்கு தெரியமாலேயே இருந்தது.

பின்னர் நண்பர் ஒருவர் மூலமாக இத‌னை அறிந்த போது உற்சாகமானார்.அதோடு கிரிக்கெட் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனார்.
சரி ஆஸ்திரேலேயா சென்று கிரிக்கெட் போட்டியை பார்ப்போம்.கிரிக்கெட்டையும் கற்று கொள்வோம் என முடிவு செய்தார்.இதனிடையே வோடோபோன் நிறுவனம் அவருக்கான போட்டி டிக்கெட் செலவு போன்றவற்றை ஏற்க முன்வந்தது.

இத்தனை பரபரப்புகும் நடுவே அவரது உணமையான பெயர் கூட யாருக்கும் தெரியவில்லை.அமெரிகாவின் மாசாசூட்ஸ் நகரில் வசிப்பவர் என்று மட்டுமே தகவல் தெரிந்தது.பின்னர் ஆஸ்திரேலியா நாளிதழ் ஒன்று அரும்பாடுபட்டு அவரை தேடிப்பிடித்தது.அவரது பேட்டியையும் வெளியிட்டது.அதில் தான் அவரின் பெயர் ஆஷ்லே கெரிக்ஸ் என தெரிய வந்தது.ஆஷஸ் என்பது காதலன் வைத்த செல்லப்பெயர் என்றும் கூறியிருந்தார்.

மேலும் தன்னுடைய டிவிட்டர் பெயரை மாற்றிகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.அவருக்கு புகழை தேடித்தந்த பெயராயிற்றே.

 நன்றி 

No comments:

Post a Comment