Tuesday, December 21, 2010

இதயத்தை தாக்கும் பாக்டீரியா!


        









இ.கோலி பாக்டீரியா என்று அழைக்கப்படும் இஸ்ச்ரிச்சியா கோலி பாக்டீரியா, நமது உடம்பில் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்து, இதயத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று கனடா நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
             பாக்டீரியா குறித்து ஆராய்ச்சியில் இரண்டாயிரம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் உடலில் இ.கோலி பாக்டீரியா பரவிய சிறிது நேரத்தில், அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

           அமெரிக்காவில் மட்டும் இந்த பாக்டீரியா பாதிப்பினால், வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 60 பேர் இறந்து விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, இதயத்தில் பிரச்சினைகள் தோன்றுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

No comments:

Post a Comment