Tuesday, December 21, 2010

பொழுது போக்கு பௌதிகம் (பெரல்மான்)

                                                                                                                             

            சந்திர சூரிய மண்டல ராஜ்ஜியங்களின் சரித்திரம் (1952) என்னும் நமது கேலி சித்திர நூலில்,17- வது நூற்றாண்டை சேர்ந்த சிரானோ டி பெர்ஜெராக் என்னும் பிரெஞ்சு நகைச்சுவைஎழுத்தாளர் தமக்கு நேர்ந்ததாக ஒரு அதிசயத்தைப் பற்றி விவரிக்கிறார். ஒருநாள் அவர்பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய வாலய்கள் அனைத்துடனும் அவர் மேலே தூக்கப்பட்டார். பல மணி நேரத்துக்குப் பிறகு பூமியில் அவர் இறங்கியபோது தம் நாடான பிரான்சிலோ, ஐரோப்பாவிலோ கூட இல்லாமல், தாம் கனடாவில் இருப்பதைக் கண்டு வியப்புற்றார். அட்லாண்டிக் கடலை இவ்வாறு தாண்டுவது சாத்தியம் என்று சிரனோ-அது விசித்திரமாய் இருப்பினும்- நம்பினார். தாம் உயர காற்றில் இருந்தபோது பூமி கிழக்கு நோக்கி தொடர்ந்து சுழன்றதால் பிரான்சுக்கு பதிலாக வட அமெரிக்காவில் தாம் இறங்கியதாக கூறினார்.


            மிக மலிவான, எளிய பிரயாண முறை என்று தான் சொல்ல வேண்டும். மேலே கிளம்பி சில நிமிஷங்கள் அப்படியே தொங்கினாற்போல் தங்கி இருந்தீர்களானால், நிரம்பவும் மேற்கேயுள்ள, முற்றிலும் புதியதோர் இடத்திற்கு வந்து விடுவீர்கள். பூமியில் பிரயாணம் செய்து ஏன் களைப்படைய வேண்டும்? மேலே காற்றின் நடுவில் வட்டமிட்டுகொண்டே, நீங்கள் சேர வேண்டிய இடம் வரும்வரை காத்திருக்க வேண்டும்? அவ்வளவுதான்.




          ஆனால் அது வெறும் கற்பனையே அன்றி வேறில்லை. முதலாவதாக நாம் காற்றில் உயர கிளம்பும்போது உண்மையில் பூமியில் நின்றும் நம்மை பிரித்துகொள்வதில்லை. அப்போதும் அதனுடன் நாம் கட்டுண்டே இருக்கின்றோம். ஏனெனில் பூமியின் ஆச்சு சுழற்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் காற்று உரையில் நாம் தொங்கிகொண்டிருக்கிறோம். வாயு மண்டலத்தின் அடர்த்தி மிகுந்த கீழ் அடுக்குகள் தன்னிடமுள்ள எல்லாவற்றையுமே மேகங்கள் விமானங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவை அனைத்தையுமே சுமந்துகொண்டு பூமியுடன் கூட சேர்ந்தே சுழல்கின்றது. காற்று மட்டும் நமது கிரகத்துடன் கூட சேர்ந்து சுழலாவிட்டால், மாபெரும் பலம் வாய்ந்த காற்றினால் நாம் எப்போதும் தாக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருப்போம். அதனுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய புயல்கூட இளம் மேற்காற்றை போல தோன்றும். பெரும்புயல் அல்லது டொர்னாடோ சுழற்காற்று வினாடிக்கு 40  கிலோமீட்டர் வேகத்தில் அதாவது மணிக்கு 144  கிலோமீட்டர் வேகத்தில் நகருகிறது. எடுத்துக்காட்டாக  லெனின்க்ராத் நகரம் அமைந்துள்ள அட்ச ரேகையில் வினாடிக்கு 230 மீட்டர் அல்லது மணிக்கு 828 கிலோமீட்டர், பூமத்திய ரேகையின் பிரதேசத்தில், உதாரணமாக சிங்கப்பூரில் வினாடிக்கு 465 மீட்டர் அல்லது மணிக்கி 1674 கிலோமீட்டர் வேகத்துடன் பூமி காற்றினூடே நம்மை இழுத்துச் செல்லும்.


காற்று வீசும்போது நாம் அசையாமல் நின்று கொண்டிருப்பதற்கும், அதில் நாம் நகரும்போது அது அசைவற்று இருப்பதற்கும் வித்தியாசமே கிடையாது.   






No comments:

Post a Comment