Tuesday, December 21, 2010

கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்



கிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
Sachin Ramesh Thendulkar
பிறப்பு - ஏப்ரல் 24, 1973
  
            தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல்பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னாமுதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

           சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியசாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது 

   
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது.
     
   1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் இது வரை 14,366 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,598 (டிசம்பர் 2010 வரை) ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.

கிரிக்கெட் வாழ்க்கை

  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
  • 1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
  •  
  •  1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார்  
  • 1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார்.அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்து கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

  • 1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
  • 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார். அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
  •  2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற காரணமானார்.இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
  • 2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
  
  • 2007-2008-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
  • 2008 அக்டோபர்17-ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12273 (நவம்பர் 10, 2008 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 40 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார்.அதிக பட்ச ஓட்டம் 248*.
  • ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2010 -இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல். 
  • 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார். 
  • ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134, டெஸ்ட் போட்டிகளில் 106. மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின். 
சோதனைகள்
  • இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
  • 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார். ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.(இந்தியப் பாராளுமன்றம் வரை இந்த சிக்கல் விவாதிக்கப்பட்டது).
  • 2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
  • 2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.
 விருதுகள 
  • இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 2008 -க்கான பத்ம விபூஷன் (Padma Vibhushan)
  • ஐசிசி ஒருநாள் சர்வதேச உலக கோப்பை XI (ICC World ODI XI): 2004, 2007
  • 2003 உலக கோப்பை கிரிக்கெட் (2003 Cricket World Cup) போட்டிகளில் தொடர் நாயகன்
  • 1997ஆம் ஆண்டுக்கான விஸ்டென் கிரிக்கெட் வீரர் (Wisden Cricketer of the Year) 
 
  • இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான 1999ல் பத்மஸ்ரீ விருது (Padma Shri)
  • கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான சாதனைகளுக்காக 1994 -ல் இந்திய அரசால் அர்ஜூனா விருதால் (Arjuna Award) கௌரவிக்கப்பட்டார்
  • விளையாட்டுத்துறை சாதனைகளுக்காக 1997-98 இந்தியாவின் உயர்ந்த கௌரவமான ராஜீவ்காந்தி கேல் ரத்னா (Rajiv Gandhi Khel Ratna) விருது அளிக்கப்பட்டது

ஒரு நாள் போட்டியில் இரட்டைச்சதம்

2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே!

   “இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.

புகழுரைகள்

  • உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
  • 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.
  • ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
   
Sachin Tendulkar Cricket Statistics
Batting RecordsTestsODI’sT20’s
Matches1744421
Innings2844311
Runs Scored143661759810
Batting Averages56.5545.1210.00
Strike Rates
86.2683.33
100s49460
50s59930
6s611850
Highest Score248*200*10
Bowling Records
Balls Overs Bowled4018802015
Wickets441541
Bowling Average52.7744.2612.00
Economy Rate3.465.104.80
Best Bowling3/105/321/12
Catches1061341


சச்சினின் விருப்பம்

     “இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட… முறியடிக்க முடியாத சாதனை என்று எதுவும் இல்லை. முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனது சாதனைகளை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார் டெண்டுல்கர்.


சச்சினிக்கு 200 ரன்னுக்கு கிடைத்த ‌கௌரவம் 


சச்சின் சாதனை செய்ததை கவுரவிக்கும் விதத்தில்  குவாலியரில் உள்ள ஹூரவாலி சாலைக்கு  சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார். 



இனி கடைசி விருப்பமாக சச்சின் அணியில் இருக்கும் போதே உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்...

வரும் 2011 உலகக்கோப்பையை நம் அணி வென்று விட்டால் சச்சின் கிரிக்கட்டின் பிதாமகன் என்ற உச்சியில் இருந்து யாராலும் இறக்கமுடியாது.

No comments:

Post a Comment