Thursday, December 15, 2011

பேஸ்புக்கிற்குச் சவால் விடுத்த சமூக வலையமைப்பின் உருவாக்குனர் மர்மமான முறையில் மரணம்

டயஸ்போரா’ என்ற சமூக வலையமைப்பு தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்திகள் சிலவற்றை வழங்கியிருந்தோம்.

ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இதன் உருவாக்குனர்களில் ஒருவரான லியா சிடோமிர்ஸ்கி தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார்.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான சிடோமிர்ஸ்கி கடந்த 2010 ஆம் ஆண்டில் டயஸ்போரா சமூக வலையமைப்பினை உருவாக்கிய நான்கு மாணவர்களில் ஒருவராவார்.

இவர் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகின்றது.

பெரும் பரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டயஸ்போரா’ பரந்தளவில் நிதி வசூலிப்பிலும் ஈடுபட்டது.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

ஆரம்ப காலத்தில் பேஸ்புக்கினை மிஞ்சுவதே தமது இலக்கென இதன் உருவாக்குனர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் சிறப்பம்சம், இது ‘ஓப்பன் சோர்ஸ்’ என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment