Thursday, November 24, 2011

கள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உதவியுடன்)

இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு சொல்லுங்க சார். மேற்கண்ட கருத்துரை “சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள்” பதிவிற்கு இடப்பட்ட்து.

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள். படிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம் ஏன் இப்படி?ஆனால் தெளிவாக சொல்ல யாருமில்லை.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.

உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை? 
பத்திரிக்கை செய்திகளை தாண்டி கள்ளக்காதல்கள் பற்றி அதிகம் காணக்கிடைக்கவில்லை. சமூகப்பிரச்சினைஎன்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்குபொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால்படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.


குற்றங்களை ஆய்வுசெய்கிறோம். மதுப்பழக்கம், புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை. 

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டிஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும்குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

இனி விஷயத்துக்கு வருவோம்.வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில்கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தைகவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர்உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.

மதிக்கப்படாத நிலை,சூழல்போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.ஏதோ ஒருவகையில் மணவாழ்வில் திருப்தியில்லாத நிலை இதைத்தூண்டும் என்பது அவரது கூற்று.அது மனதளவிலும் இருக்கலாம். ஏராளமான காரணங்களை கூறுகிறார்.

சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமேஇதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லதுமனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்து கொண்டிருக்கிறது. 

பரிணாமக்கொள்கையும்,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர்இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்குகுடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?

மனிதன் கால்களால் நிமிர்ந்துநடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான். ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள்மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள்அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.தவிர தம்பதியர் நீண்ட நாட்கள் பிரிந்திருத்தல்,தனிமை,சூழல்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.இவையெல்லாம் அனுமான்ங்கள்தான் ஆய்வுமுடிவுகள் அல்ல!

No comments:

Post a Comment