
பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும் ,பெண்களுக் கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும் அதிகம்.
வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக டெல்லியே முதலிட்த்தில் இருக்கிறது.ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான சமூக தொடர்பில்லாத நிலையில் இன்னொரு மனிதனை மிருகமாகவே கருதுகிறார்கள்.

பத்தாண்டுகளில் அதிகரித்துள்ள இன்னொரு விஷயம் இணையம்.தியேட்டர்களில் பிட்டுப்படங்களுக்கு தயங்கி தயங்கி போய்க் கொண்டிருந்தவர்களுக்கு இன்று இருபது ரூபாயில் ஒருமணி நேரம் ஆபாசபடம் பார்க்கலாம்.நகரங்களில் பெரும்பாலான பிரௌசிங் செண்டர்களில் முக்கியமான முகவரி போன்று ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆபாசமும்,போதையும் சேரும்போது விளைவுகள் மோசமாகின்றன.

இன்னொரு வகை கற்பழிப்புகள் சுத்தமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.அவை நெருங்கிய உறவினர்களால் நடக்கும் கொடூரங்கள்.தனது அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.எப்போதும் இதெல்லாம் வெளியில் வராது.இந்த வகை கற்பழிப்புகள் அதிகம்.
குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளும் நெருங்கிய உறவினர்களாலும்,தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன்.52 சதவீத குழந்தைகள் பாதிக்க்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்பம் மேம்பட்ட அளவுக்கு இன்னும் மனம் மேம்படவில்லை என்பது கவலை தரும் ஒன்று.
|
No comments:
Post a Comment