Thursday, November 24, 2011

கமலும் மணிரத்னமும் தந்த அவநம்பிக்கைகள்

அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது அண்ணன் ஒருவன் என்னைஅணுகினான்.உறவு இல்லை.என்னை விட ஆறு வயது மூத்தவன்என்பதால் அண்ணன் என்றேன்.ஆரம்ப்ப் பள்ளியோடு அவனதுபடிப்பு முடிந்து போயிருந்த்து.”டேய்,சினிமாவுக்கு போகலாம்வர்றியா?செகண்ட் ஷோ.’’

முன்பு இப்படியெல்லாம் சினிமா பார்த்துபழக்கமில்லை.அப்பாவோடு ஒன்றோ இரண்டோபார்த்திருக்கிறேன்.எனக்கும் ஆசை.எங்கள் வீட்டில்திட்டுவார்கள்,என்றேன்.வீட்டில் இருப்பவர்கள் நிலத்தில் உள்ளவீட்டில் இருந்தார்கள்.நான் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டுதனியாக இருந்தேன்.”செலவெல்லாம் நானேபார்த்துக்கொள்கிறேன்” என்றான்.நானும் சம்மதம்சொல்லிவிட்டேன்.
முதல் முறையாக செகண்ட் ஷோ வுக்கு போகிறேன்.பரபரப்பாகஇருந்த்து.தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எங்கள்ஊர்.முக்கால் மணி நேர பயணத்தில் நகரத்தை அடையலாம்.எட்டுமணிக்கு புறப்பட்டு ஒன்பது மணிக்கு தியேட்டர் வாசலில்இருந்தோம்.நல்ல கூட்டம்.புதுப் படமாக இருக்க வேண்டும் என்றுநினைத்தேன்.மங்கலான விளக்கொளியில் போஸ்டரைபார்த்தேன்.

பட்த்தின் பெயர் ‘நாயகன்’.”இந்த படம் ரொம்ப நாளாக இருக்கிறதே?”என்று கேட்டேன்.இன்னிக்கு கடைசி நாள்டா! என்று பதில்வந்த்து.அதனால்தான் இவ்வளவு கூட்டம்.எப்படியோ முந்தியடித்துடிக்கெட் வாங்கிவிட்டான்.உள்ளே உட்கார இடம் கிடைத்துவிட்ட்து.அவன் இரண்டாம் முறையாக பார்க்கிறான்.கதவுகள்மூடவில்லை.அங்கே ஏராளமானவர்கள் நின்று கொண்டே படம்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு தூக்கம் தலையை சுற்றியது.ஆனால்தூங்கவில்லை.பட்த்தில் மனம் ஒன்றிப் போய்விட்ட்து.ஒரு பாட்டுமுடிந்தவுடன் விசில் சத்தம் காதைப்பிளந்த்து.’ஒன்ஸ்மோர்’-கூக்குரல் தியேட்டரை நடுங்கவைத்த்து.அந்த பாடல் எதுவென்று உங்களுக்கும் தெரியும்.

நான் எதிர்பார்க்கவில்லை.படம் முடிந்து வெளியே வந்த பின்லாரிகளை நிறுத்த ஆரம்பித்தான்.நள்ளிரவிலெல்லாம் எங்கள்ஊருக்கு பஸ் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்த்து.போகும்லாரியை கேட்டுதான் போக வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைஎன்பதால் எளிதென்று நினைத்தேன்.ஆனால் பத்து லாரிக்குபிறகுதான் ஒன்று கிட்டியது.

லாரி டிரைவர் திட்டினார்.இப்படியெல்லாம் யார் சினிமா பார்க்கச்சொன்னார்கள்.நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த்துலாரி.நீண்ட தொலைவு செல்லும் வாகனம்.ஊர் வந்த அவசரத்தில்’நிறுத்துங்கள்’என்றோம் சத்தமாக! வண்டி உடனே நின்றது.நாங்கள்இருக்கையில் இருந்து எழும்போது “தடார்”’ என்று ஒரு சத்தம்.

பயந்து போனேன்.இருதய துடிப்பு அதிகமாகிவிட்ட்து.திடீரென்றுலாரி நிற்கவே பின்னால் வந்த லாரி மோதிவிட்ட்து. யாருக்கும் அடிபடவில்லை.எனக்கு தலையில் லேசாக இடித்து விட்ட்து. கீழே இறங்கினோம்.இரண்டு லாரி டிரைவர்,கிளீனர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களை யாரும் கண்டுகொள்ள வில்லை.அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.’யார் கிட்டயும்சொல்லாதடா” என்றான். அடுத்த நாள் மாலை பார்த்த போதும் அந்தலாரிகள் அங்கேயே நின்றிருந்தன. டிரைவர், கிளீனர்களைகாணவில்லை.அடுத்த நாளும் அங்கேயே நின்றிருந்த்து.

சென்ற முறை ஊருக்கு சென்ற போது அவரைக்கேட்டேன்.”இப்போதெல்லாம் செகண்ட் ஷோ போவதில்லையா?”’எனக்கு தெரிந்து யாரும் போகிறமாதிரி தெரியவில்லை.’’

No comments:

Post a Comment