Sunday, November 20, 2011

மக்கள் பணத்தில் கைவைக்கும் அரசு! சட்டங்கள் மாற்றம் பெறுகின்றன!

ஒருவர் சுகவீனமாக இருக்கும் போது வேலைக்ககுச் செல்லாமல் இருக்கும்போது இவ்வளவு நாளும் முதல் மூன்று நாட்களுக்கும் Securité Socialஅவர்களுக்கான காப்புறுதிப் பணத்தை (Remboursement) வழங்குவதில்லை. நான்காவது நாளிலிருந்தே அவர்களுக்கான காப்புறுதிப்பணம் வழங்கப்படும். இனிமேல் நான்காவது நாளும் வழங்கப்படாது ஐந்தாவது நாளிலிருந்தே அவர்கள் மருத்துவக் காப்புறுதிப்பணம் வழங்கப்படத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

Bordeaux வில் நடைபெற்ற ஜனாதிபதி உரையில் RSA (RMI) வில் இருப்பவர்களும் கட்டாயமாக கிழமைக்கு 7 மணித்தியாலங்கள் வேலை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களுக்கு ஒரு கௌரவத்தை வழங்குவதற்காகவே என்றும் கூறியுள்ளார். அவர்கள் வேலை செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைத் தவிர்ப்தற்காகவே இந்நத் திட்டம் வகுக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரும் உதவிப் பணத்திற்குரிய வேலையை அவர்கள் அரசாங்கத்திற்குச் செய்து தரும் வேலையின் சம்பளமாகவே அவர்கள் பெறுவதால் அவர்களும் மற்றவர்கள் போல் தமது கடமையைச் செய்து தமது உரிமையைப் பெறுகிறார்கள் என்றும் கூறினார்.
இதன் மூலம் அரசுக்கு 200 மில்லியன் யூரோக்களைச் சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.. இது தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கேயாகும். அரச நிறுவனங்களில் வேலை செய்வோர்க்கு முதல் நாளிலிருந்தே அவர்கள் காப்புறுதிப் பணம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்களுக்கு இரண்டாவது நாளிலிருந்தே காப்புறுதிப்பணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளின் கடன் சுமைகளைக் களைவதற்காகத் தம் மீது அப்படியான அழுத்தங்கள் பிரயோகிக்ப்படுவதை பிரான்ஸ் மக்கள் விரும்பவில்லை. இப்படியான தீர்மானங்கள் சமூக உதவிகளைப் பாதிக்கும் போது அதற்குரிய பணத்தை அரசு தமது சம்பளங்களிலிருந்து வெட்டிக்கொள்ளும் பொழுது இந்த அரசு மக்ளின் ஆதரவை வலுவாக இழக்கப்போகின்றது.



No comments:

Post a Comment