Friday, April 8, 2011

பணியிடங்களில் பாலியல் தொல்லை : ஆய்வு சொல்லும் கருத்து!



பாலியல் தொல்லை என்பது மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான ஒரு செயல். பாதிக்கப்படுபவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நியாயம் ஒன்றுதான்.
ஆனால் செய்தித்தாள், தொலைக்காட்சி, சினிமா, இணையம் என பல்வேறு ஊடகங்கள் மூலம் அடிக்கடி நம் கவனத்துக்கு வரும் பாலியல் தொல்லை குறித்த பெரும்பாலான செய்திகள், பொதுவிடங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளாகவே இருக்கின்றன.
இப்படிச் சொன்னவுடனேயே சிலர், பெண்ணியம்-ஆணாதிக்கம் பேசுகிறான் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டையிட வந்துவிடுவார்கள் அவரவர் பக்கத்து நியாயங்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளை எடுத்துக் கொண்டு! ஆனால், பெண்ணியம் குறித்து பெருமையாக பேசுவதோ, ஆணாதிக்கம் குறித்து இழிவாக பேசுவதோ, எது நியாயம், எது அநியாயம் என்று விவாதிப்பதோ அல்ல இக்கட்டுரையின் நோக்கம்!

மாறாக, இதுவரை நாம் ஊடகங்களின் மூலம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்ததாய் கேள்விப்பட்டு/பார்த்து விவாதித்த பாலியல் தொல்லைகளின் பின்புலத்தை, திட்டமிடப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உற்று நோக்கி, ஆராய்ந்த பின் இப்பிரச்சினை குறித்து முன்வைக்கப்படும் சில கருத்துக்களையே இனிவரும் பகுதியில் வாசிக்க இருக்கிறோம்!
பாலியல் தொல்லை; என்ன, எங்கு நிகழ்கிறது?
நம் சமுதாயத்தில் பொதுவிடங்களுக்கு அடுத்தபடியாக, பணியிடங்களிலேயே அதிகம் அரங்கேறுகிறது பாலியல் தொல்லை. தங்களுக்கு ஏற்படும் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, இழிவுபடுத்தும், துன்பப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பெண்ணை, பேச்சு மற்றும் பேச்சு தவிர்த்த பல்வேறு செயல்பாடுகளுடன் அணுகுவது பாலியல் தொல்லை என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மிஷ்ஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களான எமிலி லெஸ்கினென், லிலியா கார்டினா, மற்றும் டானா கபத் ஆகியோரின் கூற்றுப்படி, பாலியல் தொல்லையானது ஒருவரை தனிமனித அளவிலும், பணியளவிலும் மோசமாக பாதிக்கிறதாம். மேலும் இத்தகைய பாலியல் தொல்லையானது, பாலின வேற்றுமை கற்பிப்பதிலேயே மிகவும் மோசமானது என்றும் கருத்தப்படுகிறது. அதனால், தற்போதைய சட்டத்தில் பாலியல் தொல்லையை பாலின வேற்றுமை கற்ப்பிப்பதற்க்கு கீழ் வகைப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் எமிலி உள்ளடக்கிய ஆய்வுக்குழுவினர்.
ஆனால், பொதுவாக பாலியல் தொல்லையென்பது, ‘தேவையற்ற செக்ஸ் கவனத்தை’ உள்ளடக்கிய ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. மேலும், எமிலி அவர்களின் ஆய்வில் பங்குகொண்ட பெண்களில், பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படும் பத்தில் ஒன்பது பேர், ‘செக்ஸ் தேவைகள் இல்லாத’ வகையான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக செக்ஸ் தேவைகள் சம்பந்தப்படாத எந்தவொரு பாலியல் தொல்லையும், பாலியல் தொல்லையாக கணக்கிலெடுத்துக்கொள்ளப்படாமல், சட்டத்தால் நிராகரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம் என்கிறார் எமிலி!

No comments:

Post a Comment