Friday, April 8, 2011

விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க புதிய நடைமுறை அமலாகிறது

தனியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தி பாஸ்போர்ட் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் மொத்தம் 38 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் அலுவலகங்கள் உள்ளன. பாஸ்போர்ட் அலுவலக பணிகள் அனைத்தும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


இப்பணிகளை, "அவுட் சோர்சிங்' முறையில், தனியாரிடம் விட மத்திய அரசின் வெளியுற வுத்துறை முடிவு செய்துள்ளது. "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற பெயரில், நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள தனியார் மையங்கள், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப் பவர்களின் விண்ணப்பம் சரிபார்ப்பது, விண்ணப்பித்த நபர் பாஸ்போர்ட் வாங்க தகுதியான வர் என்று சான்றிதழ்களுடன் அறிக்கை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.


விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் மையங்களில் பாஸ் போர்ட் ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவர்.பாஸ்போர்ட் கேட்டு, ஒருவர் விண்ணப்பம் செய்தால், 45 நிமிடத்தில், அனைத்து பணிகளையும் முடித்து விட்டு, அவரை அனுப்பி விடவேண்டும் என்ற கருத்தில் இந்த நடைமுறை வருகிறது. ஆனாலும், பாஸ்போர்ட் வழங்குவது மற்றும் வழங்குவதை தீர்மானிப்பதை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் தான் முடிவு செய்யும்.




பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் விண்ணப்பம், சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் ஈடுபடுவது, முதல்கட்டமாக, பெங்களூரு மற்றும் சண்டிகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் சோதனை முறையில், வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.ஒரு வருடம் கழித்து, நாட்டிலுள்ள 38 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும், 80க்கும் மேற்பட்ட "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற தனியார் மையங்கள் அமைக்கப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தனியார் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கிவிட்டால், விண்ணப்பம் செய்வோர் போட்டோ மற்றும் சான்றிதழ் நகல்களை கொண்டு வரவேண்டியதில்லை. அவர்களின் உண்மை சான்றிதழ்களை அப்படியே ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் தனியார் மையம் பதிவு செய்துவிடும். புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாக முடியும் காரியமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment