Friday, April 8, 2011

சோனியின் இரண்டு புதிய போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந்நாளில், சோனி நிறுவனம் இரண்டு 3ஜி மொபைல் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. முதலாவதாக பிரிமியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாடலின் பெயர் டபிள்யூ 902 (ஙி902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது.
மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப்பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமாகவே வந்துள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. பின்புற கேமரா, ஆட்டோ போகஸ் மற்றும் டிஜிட்டல் ஸூம் கொண்டு 5 மெகா பிக்ஸெல் திறனுடையதாக அமைந்துள்ளது . முன்புறமாக வீடியோ அழைப் பிற்கென ஒரு கேமரா தரப் பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் வசதிகள் உள்ளன. எம்.பி.3 பிளேயர், ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, ட்ரேக் ஐ.டி., புளுடூத், ஷேக் சென்சார் ஆகிய குறிப்பிடத்தக்க அம்சங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 19,231.
இரண்டாவதாக வந்துள்ள டபிள்யூ 715, நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் போனாகக் கிடைக்கிறது. 3.2 மெகா பிக்ஸெல் கேமரா, ஏ-ஜி.பி.எஸ்., வை-பி, ஸ்டீரியோ புளுடூத், எம்2 மெமரி ஸ்லாட், மியூசிக் பிளேயர் ஆகியவை இதன் சிறப்புகளாகும். இதன் மெமரி 120 எம்பி. மெமரி ஸ்டிக் மூலம் 4ஜிபி வரை அதிகப்படுத்தலாம். வீடியோ அழைப்புகளுக்கென தனி முன்புற கேமரா தரப்பட்டுள்ளது. 3ஜி வீடியோ அழைப்பு, வீடியோ பதிவு மற்றும் இயக்கம், டிஜிட்டல் ஸூம், ஜியோ டேக்கிங், இன்ஸ்டன்ட் மெசஞ்சர், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ஷேக் சென்சார் இயங்குகிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.15,000.

No comments:

Post a Comment