Sunday, April 24, 2011

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் ‘புதிய முகம்’


 உலகிலேயே முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஒரு நபருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெவ்வேறு நபர்களின் முக திசுக்கள், தோல், மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை தானம் பெற்று, இந்த நபருக்கு பொருத்தி சாதனை படைத்துள் ளனர், ஸ்பெயின் டாக்டர்கள். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நாம் அதிகமாகவே கேள்விப்பட்டுள் ளோம். குறிப்பாக, திரையுலகில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வோர் அதிகம். முகத்தில் உள்ள மூக்கு உள்ளிட்ட ஏதாவது உறுப்பின் அமைப்பு, தங்களுக்கு பிடிக்கவில்லை எனில், நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவற்றின் அமைப்பை சரிசெய்து கொள்வது வழக்கம். விபத்தில் அல்லது பேராபத் தில் சிக்கி, முகம் சிதைந்து போனால், முகமே விகாரமாகி விடும். விகாரத்தை மறைத்து, மீண்டும் முழுத் தோலுடன் முகத்தை மீட்பதற்கென, ‘முக மாற்று அறுவை சிகிச்சை’ செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
கடந்த 2005ல் பிரான்சைச் சேர்ந்த இசபெல்லா (38) என்ற பெண், அவருடைய செல்ல நாய்க் குட்டியை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதாலோ என்னவோ, அந்த நாய் அவருடைய முகத்தை கடித்துக் குதறி ஒரு வழியாக்கி விட்டது. முகத்தின் ஒரு பக்கம், விகாரமாகி விட்டது. சிதைந்து போன பகுதியைச் சீராக்க, அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன.


தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர், மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். அவரது முகத்தில் பலமாக அடிபட்டது. முகத்தின் அமைப்பு, முழுவதுமாக மாறி விட்டது. வாய் கோணலாகி, வித்தியாசமாக காட்சி அளித்தது. பற்களையும் காணவில்லை. மூக்கு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய துளை மட்டுமே இருந்தது. அதன் பின், அவரால் மூச்சு விட முடியவில்லை; உணவு உண்ண முடியவில்லை; பேச முடியவில்லை. இதையடுத்து, டாக்டர் களை அணுகிய இந்த நபர், சிறிய அளவிலான முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார். பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அங் குள்ள, வால் டி ஹெப்ரோன் என்ற மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தொடர்ந்து 22 மணி நேரம் போராடி, அவரது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண் டனர். அடையாளம் காட்டப்படாத ஒரு நபரிடமிருந்து தானம் பெற்ற முகத் திசுக்கள், மூக்கு, தாடை, பற்கள், கன்னத்தில் உள்ள எலும்புகள், தோல் ஆகியவை இவருக்கு பொருத்தப் பட்டன. பற்கள், கன்ன எலும்புகள் ஆகியவற்றை தாங்கி நிற்பதற்காக சிறிய உலோகத் தகடுகளும் அவரது முகத்தில் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோது, உறுப்புகளை தானம் கொடுத்தவரின் முகம் போல், இவருக்கு அமைந்து விடக் கூடாது என்பதில், டாக்டர்கள் கவனமாக இருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். பின், டாக்டர்கள், கண்ணாடியில் அவரது முகத்தை காட்டினர். அதில் தனது புதிய முகத்தை பார்த்த அந்த நபர், மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘அறுவை சிகிச்சைக்கு முன், அவரது நெற்றி, கழுத்து ஆகிய இடங் களில் பெரிய தழும்புகள் இருந்தன. தற்போது அதற்கான தடயமே இல்லை’ என்றார். ஸ்பெயினில் நடந்துள்ள இந்த முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment