Sunday, April 24, 2011

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட..!




எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு.


பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம்.


இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம்.

No comments:

Post a Comment