Sunday, April 24, 2011

`பால் பாயிண்ட் பேனா’வின் கதை


இன்று `இங்க்’ பேனாக்களை விட, பால் பாயிண்ட் பேனாக்களே அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த `லேடிஸ்லோ பிரோ’ என்பவர். இவர் அச்சுபிரதிகளில் உள்ள பிழைகளைத் திருத்துபவராக பணியாற்றி வந்தார். அவரிடம் பழங்கால பேனா ஒன்று இருந்தது. அந்தபேனாவை அவ்வப்போது இங்க் பாட்டிலில் தோய்த்து எழுத வேண்டும். அது அவருக்கு பெரும் சுமையாக இருந்தது. தவிரவும், திருத்தும் சமயங்களில் தாளின் பல இடங்களில் மை கொட்டிவிடும் அபாயமும் இருந்தது. இதனால், இங்க்கில் தோய்க்காமல் எழுதக்கூடிய புதுபேனாவைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினார்.

தன் சகோதரனுடன் இணைந்து பல சோதனைகளைச் செய்து பார்த்தார். ஒன்றுகூட சரியாக வரவில்லை. இறுதியாக பேனாவின் முனையில் ஒரு உலோக உருளையை வைத்து, பேனாவுக்குள் பசை போன்ற இங்க்கை செலுத்தி எழுதி பார்த்தார். இன்றைய பால் பாயிண்ட் பேனாக்களுக்கான அடிபடை அதுதான். ஆனால், இதைத் தயாரிப்பதற்கு அதிக செலவானது. அதேசமயம் இதன் பயனை ஒருசிலர் மட்டுமே உணர்ந்தனர்.

இரண்டாம் உலகபோரின்போது தான் பால் பாயிண்ட் பேனாக்களுக்கு மவுசு அதிகரித்தது. விமானங்களில் செல்லும்போது பவுடன் பேனாக்களில் உள்ள இங்க் கசிய, விமானப்படை அதிகாரிகள் தங்களுடைய பைலட்டுகளுக்காக பால் பாயிண்ட் பேனாக்களை வாங்கிக் கொடுத்தனர். `மிக உயரத்திலும் எழுதும் குச்சிகள்’ என்று அதற்கு பெயர் சூட்டபட்டது. இதன் பின்னர் தான் பால் பாயிண்ட் பேனாக்கள் அதிகமாக புழக்கத்துக்கு வந்தன.

No comments:

Post a Comment