Sunday, April 24, 2011

பறவைகளின் தூக்கம்!


பறவை இனத்தில் பல, வித்தியாசமான முறையில் தூங்குகின்றன. அப்படி விந்தையாகத் தூங்கும் சிற பறவைகள்…
* `வவ்வால் கிளி’ என்ற பறவை ஒரு காலால் ஏதாவது கிளையைப் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகிறது.
* `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்து தூங்கும்.
* துருவப் பிரதேசங்களில் காணப்படும் ஒருவகை வாத்து, பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்துத் தூங்கிவிடுகிறது.

* நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை, பகல் நேரங்களில் பூமிக்கடியில் காணப்படும் விரிசல் வளைவுகளில் நுழைந்துகொண்டு தூங்கும்.
* `கிரீப்பா’ என்ற பறவை மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்துக் கொண்டு தூங்கு
கிறது.

* `த்ரஷ்’ என்ற பறவை குளிர்காலத்தில் தினமும் 15 மணி நேரம் தூங்கும். ஆனால் கோடை காலத்தில் இரவு இரண்டு மணிக்கே விழித்துவிடும். பின்னர் மறுநாள் இரவு 10 மணிக்குத்தான் தூங்க ஆரம்பிக்கும்.
* ஆஸ்திரேலியாவில் காணப்படும் `தவளை வாயன்’ (பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்பகர்ணன். அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலையாது.
பொதுவாகப் பறவைகள் உறங்கும்போது தமது இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக்கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து கொண்டு அவற்றின் உடல் வெப்பம் வெளியேறி விடாமல் தடுக்கும். இதன் காரணமாகவே சில பாலூட்டிகளும் தமது உடலைப் பந்து போலச் சுருட்டிக்கொண்டு தூங்குகின்றன.

No comments:

Post a Comment