கம்ப்யூட்டர்களில் தகவல்களை சேமித்து வைக்க `ஹார்டு டிஸ்க்’ எனப்படும் நினைவுத்தகடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல செல்போன்கள், டிஜிட்டல் கேமிராக்கள் போன்றவற்றில் தகவல்களை பதிவு செய்ய `மெமரி கார்டு’ வசதி உள்ளது. கொள்திறனுக்கு ஏற்ப இந்த நினைவுத்தகடுகள் கிடைக்கின்றன.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நினைவுத்தகடுகள் அளவில் பெரிதாக இருந்தன. தொழில்நுட்பம் வளரவளர சிறிய ஸ்டாம்ப் அளவில் உள்ள மெமரி கார்டில் பலநூறு பக்கங்கள் உள்ள தகவல்களை சேமிக்கும் வசதி உருவானது. இப்போது நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதைவிட பலமடங்கு சேமிப்பு வசதி, ஆனால் மிகச்சிறிய மெமரி கார்டு என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வகையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் `நானோ டாட்ஸ்’. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நானோ டாட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெமரி கார்டு என்பது ஒரு சதுர அங்குலம் அளவில் இருக்கும். இந்தச் சிறிய `சிப்’-ல் லட்சக்கணக்கான `நானோ டாட்’ கள் இடம்பெற்று இருக்கும். இவை காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும். அடுத்த கட்டமாக லேசர் தொழில்நுட்பத்தில் இதை இயக்கும் வகையில் ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இதைவிட அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வகையில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மெமரி கார்டுகள் தயாரிக்கப்படும்.
|
No comments:
Post a Comment