Thursday, December 8, 2011

ராஜா ஊழலிலும் அழகான பெண்கள், கோடிகள், இத்யாதி – II

ஒரு நாட்டில், இப்படி தொடர்ந்து பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சிறிதுகூட மனசாட்சியில்லாமல், போதாகுறைக்கு ஆணவமாகப் பேசிக்கொண்டு, திரிந்து கொண்டிருக்க எப்படி இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு தைரியம் வருகிறது?

நீரா ராடியா அரசியல் ஏஜென்டா, மந்திரிகளை நியமிக்கும் ஒப்பந்தக்காரரா? கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை.

DMK-ministrs-nexus-corruption

மேலேயுள்ள உரையாடல்கள் அவர்களைத் தோலுரித்திக் காட்டுகின்றன.

Kanimozhi-Radia-Raja-nexus

$ அமைச்சர் பதவிகள் இவ்வாறு விற்க்கப் படுகின்றன அல்லது வாங்கப் படுகின்றன, அதற்கு இடைதரகர்களாக அழகான பெண்கள் வேண்டும், நடிகைகள் வேண்டும் என்றால் எப்படி?

$ அதன் மகத்துவம், சகசியம் என்ன?

$ தேர்ந்தெடுக்கும் குடிமக்கள்-பிரஜைகளைவிட, இவர்கள் தாம் ஆளுமையை-ஆட்சியை நிர்ணயிக்கின்றனர் என்றால், அவர்களுடைய தகுதி என்ன?

$ பிறகு எதற்கு அப்துல்கலாம் என்றெல்லாம் பேசவேண்டும்?

$ பேசாமல். தாவூத் இப்ராஹிமை ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ ஆக்கிவிட்டு இந்தியர்கள் சாகலாமே?

$ கசாப்புக்காரன் கசாபை ராணுவ மந்திரியாக்கிவிடலாமே?

MK-ராஜா-ஸ்பெக்ட்ரம்-ஊழல்

குடும்ப சகிதமாக – அதுவும் அந்த ஐந்து மந்திரிகள் கூட்டத்துடன் சோனியாவை சந்திப்பது அரிசிக்காகவோ, வெங்காயத்திற்காகவோ நிச்சயமாக இல்லை.

யார் அவ்வாறு நடந்து கொள்ள அனுமதிக்கின்றனர்?

No comments:

Post a Comment