Thursday, December 8, 2011

தமிழக மக்கள் காது செவிடாகும் அபாயம் - எச்சரிக்கை ரிப்போர்ட்

மாலை நேரம். கல்லூரியில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார் மாணவி ரேகா. எதிரில், சாலையில் சவ ஊர்வலம் வந்தது.

அதைக் கண்டதும் சாலை யோரம் ஒதுங்கி நின்றார் மாணவி ரேகா. சவத்திற்காக பற்ற வைத்த வானவெடி ஒன்று, மேலே போகாமல், பக்கவாட்டில் சீறியபடி வந்து ரேகாவின் காதருகே டமார் என்று வெடித்தது. 

அய்யோ என்று அலறிய படி தரையில் உட்கார்ந்தார். உடம்பில் எந்த இடத்திலும் காயமில்லை. ஆனால் ரேகாவின் காதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

ரேகாவை, ஆட்டோவில் ஏற்றி இ.என்.டி. டாக்டரிடம் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர், ""காது ஜவ்வு கிழிந்து விட்டது. இனிமே இந்த மாணவியின் காது இனி கேட்காது!'' என்றார்.

மனதளவில் நொறுங்கிப் போயி ருக்கிறார்கள் ரேகாவும், குடும்பத்தினரும்.
திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த எக்ஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் மகள் கர்த்தவ்யா. இன்னும் மணமாகாத இந்த இளம் பெண் ஒரு முதுநிலைப் பட்டதாரி. கடந்த ஒரு மாதமாக, கர்த்தவ்யாவின் காதுக்குள் ஆயிரம் வண்டுகளின் ரீங்கார இரைச்சல். திருவண்ணாமலைப் பகுதி யில் பல டாக்டர்களிடம் பார்த்தும் பயனின்றி, சென்னை சென்று, காஸ்ட்லி மருத்துவமனை ஒன்றில் காட்டினார்கள். ஏகப்பட்ட டெஸ்ட்டுகளுக்குப் பிறகு டாக்டர் கேட்டார்.

""தினமும் வீடியோ வாய்ஸ் சாட் மூலம் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தீர்களா?''

""ஆமாம் டாக்டர்!''

""அதன் விளைவுதான்... செவிக்கும் மூளைக்கும் இடையில் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக் கிறது. உங்களுக்கு காதில் மட்டும்தான் பாதிப்பு. பலருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இசையை- பாடலை ரசிக்கிறேன் என்று இரவு பகலாக காதுகளில் இயர் போனை பொருத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்!'' என்றார் டாக்டர்.

நெய்வேலி என்.எல்.சி.யில் புல்டோசரில் வேலை செய்த பெரியவர் அச்சாவின் இரண்டு காதுகளும் செவிடாகிவிட்டன.

""டெய்லி... பலமணி நேரம்... தடதட சத்தத்திலேயே வேலை செய்ததாலதான் என் காதுகள் ரிப்பேராகிவிட்டன. காதுல மெஷின் மாட்ட வேண்டியதாப் போச்சு. எனக்கு மட்டுமில்லை. என்னோட வேலை செஞ்ச பலருக்கும் இதுதான் கதி!'' என்கிறார் அச்சா.

குடும்பத் தலைவி கீதா இளவரசனுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை. ""தனியார் பஸ்ல ஏற முடியலை. ஆடியோ பாட்டுச் சத்தம் பின்னாடி வர்ற ஒன்பது பஸ்சுக்கும் கேட்கும். அவ்ளோ சவுண்டை வச்சு விடுறாங்க. சவுண்டைக் குறைக்கச் சொன்னா ஓட்டுநரும் நடத்துநரும் சண்டைக்கு வர்றாங்க. இதுகூட பரவாயில்லை. எப்பவோதான் பஸ்ல போறோம். ஆனால் இந்த ஒலிபெருக்கிச் சத்தம்? திருவிழா... திருமணம், ஐயப்பன் பூசை... விநாயகர் சதுர்த்தி, அவர் பிறந்த நாள்... இவர் செத்த நாள்... என்று ரெண்டு கிலோமீட்டர் நீளத்துக்கு ரோட்ல ரெண்டுபக்கமும் கூம்புக் குழாயை கட்டிட்டு... பாட்டு போடுறாங்க... பிள்ளைங்க படிக்க முடியலை. தூங்க முடியலை... காதெல்லாம் கொய்ய்னு சவுண்ட்... ஊரையே செவு டாக்குறாங்க!'' குமுறினார் கீதா இளவரசன்.

""சாயந்தரம் 6 மணிக்குதான் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடக்கும். ஆனால் உளுந் தூர்பேட்டை முழுக்க ஒலி பெருக்கிகளைக் கட்டி, காலைல இருந்தே அலற விட்டுருவாங்க. கல்யாண மண்டபங்கள்ல கேக்கிற அலறல் இருக்கே... சகிக்க முடியாது. பக்கத்தில ஸ்கூல் இருக்கே, காலேஜ் இருக்கே, ஆஸ்பத்திரி இருக்கேனு கூட்டம் போடுற... ஒலிபெருக்கிக் குழாய் கட்டுற யாரும் கவலைப்படுவதில்லை. பற்றாக்குறைக்கு பஸ், லாரி, கார், டூவீலர்கள் அடிக்கிற ஹாரன் சத்தம் இருக்கே... போதுமடா சாமி... இதுக்கெல்லாம் என்னை மாதிரி உங்க மாதிரி ஆளுங்களால ஒண்ணும் செய்ய முடியாது. அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்கணும். நல்லா இருக்கிற நம்மை எல்லாம் செவிடர்களாக்கும் இந்த சவுண்ட் சைத்தான்களை அடக்கியே ஆகணும்!'' -இது உளுந்தூர்பேட்டை பாலுவின் கோபம்.

காது, மூக்கு, தொண்டைக்கான நிபுணர் டாக்டர் வெற்றிவேலை, விழுப்புரத்தில் சந்தித் தோம்.

""நமது ஐம்புலன்களும் மிகவும் மென்மை யானவை. அதுவும் நமது காது இருக்கே அது பூ மாதிரி. பத்துப் பதினைந்து டெசிபலுக்கு அதிகமான சத்தத்தை நம்ம காதுகளால் தாங்க முடிவதில்லை. ஆனால் நம்மைச் சுற்றிலும் சதா சர்வகாலமும் உண்டாக்கப் படுகிற சத்த மோ 120 டெசிபல் வரை இருக் கிறது. காது கேளாமை ஏற் படுவதற்கு இது தான் காரணம். சமீபத் தில் எங்கள் மருத்துவக் குழு, ஒரு கரும்புத் தொழிற் சாலை ஊழியர் களிடம் பரிசோதனை செய்தது. 

அதில் 100-க்கு 20 பேருக்கு நரம்புகள் பாதிக் கப்பட்டிருப்பதைக் கண்டோம். அப்படிப்பட்ட, மிஷின்களின் சத்தம் அதிக முள்ள தொழிற்சாலைகளில் காது, மூக்குக் கவசத்தை பயன்படுத்தலாம்.

மற்றபடி திருவிழாக் கள், குடும்ப விழாக்கள், அரசியல் கூட்டங்களில் கூம்பு ஒலிபெருக்கிகளை பயன் படுத்துவதை முற்றாகத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால்... காது கேளாதோர் எண்ணிக்கை பன்மடங்காகி விடும்!'' என்று எச்சரித்தார் டாக்டர் வெற்றி வேல்.

No comments:

Post a Comment