Thursday, December 8, 2011

நான் பெங்களூரு சின்னப்பொண்ணு

தமிழில் வருடத்துக்கு இரண்டு டஜன் ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதில் அபூர்வமாக ஒன்றிரண்டு பேர்தான் கவனத்தை ஈர்த்து வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள். 


ப்ர‌ணீத்தாவை அந்த ஓ‌ரிருவ‌ரில் சேர்க்கலாம். உதயனில் அறிமுகமான இவரை அப்படம் ச‌ரியாக போகாத நிலையிலும் கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார்கள். இனி ப்ர‌ணீத்தா உங்களுடன்...

நீங்க நடிக்க வந்தது ஏற்கனவே திட்டமிட்டதா? இல்லை எதிர்பாராத விபத்தா?

நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சதேயில்லை. பெங்களூருவில் பிளஸ் டூ படிச்சிட்டிருந்த நேரம் எதிர்பாராத விதமாதான் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. கன்னட போக்கி‌ரி படத்துக்கு ஹீரோயின் தேடிகிட்டு இருந்தபோது என்னைப் பார்த்த ஒருவர் போக்கி‌ரி பட இயக்குனர்கிட்ட என்னைப் பற்றி சொல்லியிருக்கார். அப்போது எக்ஸாம் முடிஞ்சிட்டதால நடிக்க சம்மதமான்னு கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். நானே எதிர்பார்க்காத ஆக்சிடெண்ட்தான் நடிக்க வந்தது.

நடிக்க வந்ததால் ஏதாவது இழந்ததாக நினைத்ததுண்டா?

இன்‌ஜினிய‌ரிங் படிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. நடிக்க வந்ததால அது முடியலை. ஆனா அதற்காக வருத்தம் எல்லாம் இல்லை. போக்‌கி‌ரி முடிஞ்சதும் உடனே தெலுங்கில் வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் பிஸியாயிட்டேன். புதுப்பது ஆட்கள், புதுப்புது உடைகள், ஒவ்வொரு நாளும் புது லொகேஷன்கள்னு சினிமா எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இனி வேற ஏதாவது வேலைக்குப் போகணும் என்றால்தான் என்னால் முடியாது. ஐ லவ் சினிமா.

குறுகிய காலத்தில் மூன்று மொழிகளில் நடிச்சிட்டீங்க. தமிழ் ஃபீல்டைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

இங்க எல்லோருமே ஹார்ட்வொர்க் பண்றாங்க. முக்கியமா நிறைய வெரைட்டியான சினிமா இங்கதான் தயாராகுது. ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். ஆனா அதுக்குள்ள தமிழ் சினிமா எனக்கு ரொம்ப நெருக்கமாயிடுச்சி.

நீங்க நெருக்கமாயிட்டதா சொன்னாலும் உதயனுக்குப் பிறகு ஏன் நீண்ட இடைவெளி...?

கன்னட, தெலுங்குப் படங்களில் கமிட்டாகியிருந்ததால் உடனே தமிழுக்கு வர முடியலை. அதை முடிச்சுக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்புறம் தமிழில் நான் கேட்ட கதைகளில் சகுனிதான் பிடிச்சிருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கிட்டேன்.

சகுனி எந்த மாதி‌ரிப் படம்?

முதல்ல சகுனி யூ‌னிட் பற்றி சொல்லணும். கார்த்தி, சந்தானம், இசையமைப்பாளர் ‌ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துன்னு எல்லோருமே பெ‌ரிய ஆளுங்க. இயக்குனர் சங்கர் தயாள் அறிமுகம்னாலும் பி‌ரில்லியண்ட்.

இன்னும் கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை...?

சகுனி அரசில் படம். சமகால அரசியல் படத்தில் இருக்கு. சீ‌ரியஸாக இருக்கிற அதேநேரம் எண்டர்டெயின்மெண்டாகவும் இருக்கும். எனக்கு நடிக்கிறதுக்கு ஸ்கோப் உள்ள வேடம். இப்போதைக்கு இதுவே அதிகம்னு நினைக்கிறேன்.

உங்க பூர்வீகம்..?

நான் பெங்களூரு பொண்ணு. அப்பா, அம்மா இரண்டு பேரும் அங்கேதான் இருக்காங்க. நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே டாக்டர்ஸ்.

சினிமாவில் உங்க லட்சியம்..?

எந்த‌க் கேரக்டராக இருந்தாலும் நூறு சதவீத ஈடுபாட்டோடு நடிக்கணும். நல்ல நடிகைன்னு பெயர் எடுக்கணும். இதுதான் என்னோட இப்போதைய லட்சியம்.

No comments:

Post a Comment