Sunday, December 18, 2011

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மொபைல் சார்ஜ் செய்யலாம். புதிய கண்டுபிடிப்பு

திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். 

சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. 
 
சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். 

வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். 

இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.

No comments:

Post a Comment